சித்ரா மரண வழக்கு…. சிக்கப்போகும் முக்கிய டிவி பிரபலம் : வெளியான அதிர்ச்சி தகவல்!!

1302

சென்னை….

சின்னத்திரை நடிகை விஜே சித்ரா கடந்த 2020 ஆம் ஆண்டு டிசம்பர் 9ந்தேதி சென்னை அருகேயுள்ள நசரத்பேட்டை சொகுசு விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்த வழக்கில் கைதான சித்ராவின் கணவர் ஹேமந்த் 60 நாட்கள் சிறையில் இருந்து பின்னர் ஜாமீனில் வெளிவந்துள்ளார். இந்த நிலையில், சித்ரா தற்கொலை வழக்கில் தன் மீதுள்ள குற்றப்பத்திரிகையை ரத்து செய்யக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

அந்த வழக்கை விசாரித்த நீதிபதி, ஹேம்நாத் மீதான குற்றச்சாட்டுக்கு போதிய ஆதாரம் உள்ளதால் குற்றப்பதிரிகையை ரத்து செய்ய முடியாது என்று கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். மேலும், விசாரணை நீதிமன்றத்தில் விசாரணையை எதிர்கொள்ளவும் நீதிமன்றம் அவரை அறிவுறுத்தியுள்ளது.

இந்த நிலையில், சித்ரா மரண வழக்கில் என்னை விட நிறைய ஆதாரங்கள் என்னுடைய நண்பர் ரோகித்திடம் இருப்பதாக சித்ராவின் காதல் கணவர் ஹேமந்த் தற்போது கூறியிருப்பது வழக்கில் முக்கிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

அது தொடர்பாக அவர் வெளியிட தகவலில், சித்ராவின் மரணத்தில் விஜய் டிவி ரக்ஷன் மட்டும் சென்னை அண்ணாநகர் விமலா மெஸ் ஓனர் குறிஞ்சி செல்வன் ஆகிய இருவருக்கும் தொடர்பு இருக்கிறது. அதற்கான ஆதாரம் நண்பர் ரோகித்திடம் உள்ளதாகவும்,

அவரை விசாரித்தால் ஆதாரங்கள் கிடைக்கும் என்றும் ஹேமந்த் தெரிவித்துள்ளார். மேலும், சித்ராவுக்கு இந்த இரண்டு பேரும் பாலியல் தொல்லை கொடுத்தார்களா அல்லது பண தொல்லை கொடுத்தார்களா என்று ரோகித்திடம் உள்ள ஆதாரமே வெளிப்படுத்தும் என்றும் ஹேமந்த் கூறியுள்ளார்.

சித்ரா வழக்கில் அரசியல் புள்ளிகளுக்கு தொடர்பு இருப்பதாக கூறப்படும் நிலையில் விஜே ரக்ஷ்ன் பெயரும் ஏற்கனவே அடிபட்டது. ஆனால், அது பெரிதாக்கப்படவில்லை. ஹேமந்த் மற்றும் சித்ராவின் நண்பர் என்று அறியப்படும் ரோகித் ஹேமந்த்துக்கு எதிராக பல குற்றச்சாட்டுகளை வைத்து பேசி வருகிறார்.

இவர் ஹேமந்த்தின் ஜாமீனுக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்களும் செய்தார். அப்போது அந்த மனுவில், ஜாமீனுக்கு பிறகு ஹேமந்த் மீடியாவில் பேசி வருவது பல விஐபி-களை களங்கப்படுத்துவதாக உள்ளது என்று குறிப்பிட்டிருந்ததாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில், பெயர் குறிப்பிடாத அந்த விஐபிகள் தான் ரோகித்தை பின்னால் இருந்து இயக்குவதாக ஹேமந்த் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.