கடலோரக் கவிதைகள் என்ற படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ராஜா. இவரது உண்மையான பெயர் வெங்கடேஷ், 1993ம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட இவர் சினிமா பக்கம் இப்போதெல்லாம் காணவில்லை.
விசாரித்ததில், மிகவும் அழுத்தமான கதாபாத்திரம் கிடைக்க வேண்டும் என்பதற்காக காத்துக் கொண்டிருக்கிறாராம். அப்படி ஒரு கதாபாத்திரம் வந்தால் கண்டிப்பாக நடிக்க வருவேன் என்று கூறியுள்ளார்.
படம் வரும்போது வரட்டும், ஏனென்றால் தற்போது மார்பிள் பிசினஸிலும் நான் பிஸியாக இருக்கிறேன் என்று பேசியுள்ளார்.இவருக்கு ஒரு மகள், மகன் இருப்பது குறிப்பிடத்தக்கது.