சிரித்துக்கொண்டே இளம் மனைவியின் தலையுடன் சாலையில் நடந்து சென்ற நபர் : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

364

ஈரான்….

நாட்டை விட்டு தப்பியோடிய மனைவியின் தலையை வெட்டி, ஒரு கையில் தலையும், மறு கையில் இரத்தக்கரை படிந்த கத்தியுமாக ஈரான் நாட்டவர் ஒருவர் வலம் வந்த சம்பவம் ஒன்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஈரானிலுள்ள Ahvaz என்ற நகரில் வாழ்ந்துவந்த Mona Heydari(17) என்ற இளம்பெண், தன் கணவருக்குத் தெரியாமல் துருக்கிக்கு தப்பி ஓடியுள்ளார்.

அவர் தங்கள் குடும்பத்துக்கு அவமானத்தை ஏற்படுத்திவிட்டதாக கருதிய அந்த பெண்ணின் தந்தையும் சகோதரரும் சென்று Monaவை மீண்டும் ஈரானுக்கு அழைத்துவந்துள்ளனர்.

பொலிசார் Monaவின் கணவர் முதலான மூன்று ஆண்களை கைது செய்துள்ளனர். ஈரானில் இதுபோன்ற கௌரவக் கொலைகள் உறவினர்களாலேயே செய்யப்படுவதால், அவர்கள் மீது யாரும் புகாரளிப்பதில்லை.

எனவே இந்த குற்றங்கள் அதிகம் வெளி உலகுக்குத் தெரியாமலே இருந்து விடுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.