நெல்லை ராமையன்பட்டி சிவாஜி நகரைச் சேர்ந்தவர் கண்ணன் (33) (பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன). இவருடைய மனைவி மாரி (18). கண்ணன் கேரளாவில் வேலை செய்து வந்தார். இந்நிலையில் அவர் ஊர் திரும்பிய போது மனைவியும், 2 அரை வயது குழந்தையும் மாயமாகி இருந்தது தெரியவந்தது.
இதனையடுத்து அவர் பொலிசில் புகார் கொடுத்தார். இந்நிலையில் அந்த இளம் பெண் மாரி, 17 வயது இளைஞனுடன் ஓடிப்போனது தெரியவந்தது. இதனையடுத்து அவர்கள் இருக்குமிடத்தை கண்டுபிடித்த பொலிசார் மாரியை கைது செய்து குழந்தையை மீட்டு கண்ணனிடம் கொடுத்தனர்.
அந்த இளைஞனை காப்பகத்தில் ஒப்படைத்தனர். தமிழகத்தில் இதுபோன்ற குடும்பச் சிக்கல்கள் அதிகரித்து வருகின்றன.
அரசும், தனியார் பொது நல அமைப்புகளும் இதுபோன்ற குடும்பச் சிக்கல்களை தீர்க்க சேவைப்பணியில் ஈடுபடுவது காலத்தின் கட்டாயமாக உள்ளது.