டெக்சாஸ் மாகாண சிறையில் Shaye Bear(25) என்னும் பெண் பிரசவ வலியில் கதறி துடித்தபோது அவர் நடிப்பதாகக் கூறி சிறைக்காவலர்கள் அலட்சியப்படுத்த, அவர் சிறை அறையிலேயே குழந்தை பெற்றெடுத்த பரிதாப சம்பவம் நடைபெற்றுள்ளது.
ஐந்து மாதங்களே கர்ப்பமாக இருந்த நிலையில் Shaye Bearவுக்கு திடீரென்று பிரசவ வலி ஏற்பட்டது.அவர் சிறைக்காவலர்களை கதறியழைத்தும் யாரும் அவரது குரலுக்கு செவி சாய்க்கவில்லை.
யாரும் உதவிக்கு இல்லாமல் கதறித் துடித்து குழந்தை பெற்ற Shaye Bearஇன் குழந்தையின் அழுகுரல் கேட்ட பிறகே சிறைக்காவலர்கள் அவரை வந்து பார்த்துள்ளனர்.
அப்போது கூட ஒரு காவலர் நீயே வயிற்றுக்குள் கையை விட்டு குழந்தையை வெளியே எடுத்து விட்டாயா? என்று சற்றும் மனசாட்சியே இல்லாமல் கேட்டிருக்கிறார்.
பின்னர் அருகிலிருந்த மருத்துவமனைக்கு தாயும் சேயும் கொண்டு செல்லப்பட்டிருக்கிறார்கள்.
குழந்தை ஐந்து மாதங்களிலேயே பிறந்துவிட்டதால் குழந்தைகள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட குழந்தை அவசர சிகிச்சை பிரிவில் வைக்கப்பட்டுள்ளது.
இன்னும் சிறைக்காவலர்கள் Shaye Bear வேண்டுமென்றே வலுக்கட்டாயமாக குழந்தையை வெளியே எடுத்துவிட்டதாகவே குற்றம் சாட்டி வரும் நிலையில் அதிகாரிகள் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.