கனடாவின்………
கனடாவின் ஒட்டாவாவை சேர்ந்த அலெக்ஸ் ஆர்ச்போல்டு என்பவர் பழங்கால பொருட்களை விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார்.
இவருக்கு கடந்த சில வருடங்களுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த பியானோ இசை ஆசிரியர் பெட்- ஜோன் ரேக் (76) என்ற மூதாட்டியுடன் நட்பு ஏற்பட்டுள்ளது. அவர் கடந்த நவம்பர் மாதம் உயிழந்து விட, ரேக்கின் பழங்கால பண்ணை வீட்டை அலெக்ஸ் ஆர்ச்போல்டு சமீபத்தில் 7 லட்சம் கொடுத்து வாங்கியுள்ளார்.
இதனை அடுத்து அந்த வீட்டை சுத்தம் செய்யும் பணியை அலெக்ஸ் ஆர்ச்போல்டு மேற்கொண்டுள்ளார். அப்போது அவருக்கு நம்ப முடியாத ஒரு இன்ப அதிர்ச்சி காத்திருந்துள்ளது.
அந்த வீட்டின் ஒரு இடத்தில் பழங்கால தங்க வைர மோதிரங்கள் இருந்ததை கண்டு அவர் திக்குமுக்காடி போனார். அவற்றை எடுத்தபோது அதன் அருகிலேயே விலையுயர்ந்த துணிமணிகள் இருந்துள்ளன.
இதனைத் தொடர்ந்து மற்றொரு அறையில் பழங்கால நாணயங்கள் இருந்துள்ளன. இவற்றின் மதிப்பு தோராயமாக 2 கோடி ரூபாய்க்கும் மேல் இருக்கும் என கணக்கிட்டுள்ளனர்.
அலெக்ஸ் கூறுகையில், பியானோ டீச்சரை சில வருடங்களாக தெரியும், அவரின் வீட்டுக்குள் நான் சென்றதே இல்லை.
தற்போது அவர் வீட்டுக்குள் இவ்வளவு பொருட்கள் இருக்கும் என நினைக்கவில்லை. அவர் கோடீஸ்வரர் என்பது எனக்கு தெரியவே தெரியாது என கூறியுள்ளார்.