சுப்ரமணிய புரம் படம் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதில் மெல்ல நுழைந்தவர் சுவாதி. இந்தப் படத்துக்குப் பின்னர் போராளி, இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா ,வடகறி போன்ற படங்களில் நடித்தார். தமிழைத் தொடர்ந்து தெலுங்கு திரையுலகத்திலும் வலம் வந்தார்.
28 வயது ஆகும் சுவாதிக்கு, திருமணம் செய்து வைக்க பெற்றோர்கள் முடிவு செய்துள்ளனர். தற்போது, மாப்பிள்ளை வேட்டை நடப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
நான் திருமணத்துக்கு தயாராகி விட்டேன். எனது திருமணம் தொடர்பாக என் மனதில் இருக்கும் ஆசைகளை வீட்டில் வெளிப்படையாகப் பேசி விட்டேன். இதில் எனக்கு எந்த ஒளிவு மறைவும் இல்லை. வெட்கப்படவும் இல்லை. விரைவில் என்னுடைய திருமணம் நடக்கும்.
திருமணத்துக்குப் பின்னர் முழு நேர குடும்ப பெண்ணாக மாறி விடுவேன். இல்லற வாழ்க்கையில் என்னை முழுமையாக அர்ப்பணிப்பேன் என்று தனது திருமணம் பற்றிய தகவல்களை உறுதி செய்கிறார் சுவாதி.