உண்ணிகள் என்னும் சிறு பூச்சிகள் மூலம் பரவும் பாக்டீரிய நோயான ரோடண்ட் பிளேக் என்னும் நோய் சுவிட்சர்லாந்து மக்களிடையே பரவி வருவது மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.Francisella tularensis என்னும் பாக்டீரியாவால் உருவாகும் இந்த நோய் Tularemia என்றும் அழைக்கப்படுகிறது.
முயல் வகையைச் சேர்ந்த விலங்குகளை பாதிக்கும் இந்நோய் முயல்களிடமிருந்து உண்ணிகள் என்னும் சிறு பூச்சிகள் மூலம் மனிதர்களுக்கு பரவுகிறது.நோயுற்ற விலங்குகளுடன் பழகுவதாலும் இந்நோய் மனிதர்களுக்கு பரவலாம்.கடந்த ஆண்டில் மட்டும் 130 பேருக்கு இந்த நோய்த்தொற்று ஏற்பட்டதாக அரசின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்த நோய் ஆண்டிபயாட்டிக்குகள் கொடுப்பதன் மூலம் குணமாகிவிடும் என்றாலும், சரியான நேரத்திற்குள் கண்டுபிடிக்கப்படாவிட்டால் மரணம் ஏற்பட வாய்ப்புள்ளது.காய்ச்சல், தலை வலி, உடல் வலி, வீங்கிய நிண நீர் முடிச்சுகள் மற்றும் தோலில் ஏற்படும் சிவப்பு நிறப்புள்ளிகள் ஆகியவை இந்நோயின் அறிகுறிகளாகும்