சூப்பராக ஸ்கேட்டிங் செய்து அசத்திய நாய்கள்: இணையத்தில் வைரல்!!

350

நாய்கள்……..

மனிதர்களை விட நாய்கள் அருமையாக ஸ்கேட்டிங் செய்வதை நாம் பார்த்ததுண்டா? அப்படி ஒரு காட்சியை இணையத்தில் வெளியாகி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

 

இந்த வீடியோவை, முன்னாள் அமெரிக்க கூடைப்பந்து வீரரான ரெக்ஸ் சேப்மன் ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார். அதில் ஒரு நாய் ஹீரோவைப்போல் தெருவில் ஸ்கேட்டிங் செய்கிறது.

36 நொடிகள் வருகிற இந்த வீடியோ, முதலில் ஒரு நாய் ஸ்கேட்டிங் போர்டில் ஏறி, அங்கிருந்து செல்வதைக் காட்டுகிறது.

மேலும், அந்த தெருவில் நடப்பவர்களும், சாலையோரத்தில் அமர்ந்திருப்பவர்களும் ஆச்சர்யத்துடன் பார்ப்பதும், வீடியோ எடுப்பதுள்ளனர்.

இந்த வீடியோவை பகிர்ந்ததிலிருந்து 5.76 லட்சம் பேர் பார்த்துள்ளனர். இந்த வீடியோவை பலரும் ஷேர் செய்து, ரசித்து வருகிறார்கள்.