சூப்பர் மார்க்கெட் அருகே கிடைத்த காதலன் : இளம்பெண்ணின் நெகிழவைக்கும் ‘லவ்’ ஸ்டோரி!!

270

லவ் ஸ்டோரி…..

பெண் ஒருவர் தன்னுடைய காதல் கதை குறித்து, சமூக வலைத்தளத்தில் வீடியோவாக வெளியிட்டிருந்த நிலையில், நெட்டிசன்கள் மத்தியில் தற்போது அதிகம் வைரலாகி வருகிறது. ஜாஸ்மின் கிரோகன் என்ற பெண் ஒருவர், சூப்பர் மார்கெட்டிற்கு சென்ற போது, ஒருவருடன் காதல் வயப்பட்டுள்ளார். அது மட்டுமில்லாமல், தன்னுடைய காதலனுடன் தற்போது இணைந்து வாழ்ந்து வரும் அவர், இரண்டு குழந்தைகளையும் பெற்றெடுத்துள்ளார்.

காதல் வயப்படுவதில் புதிதாக என்ன இருக்கிறது என தோன்றலாம். ஆனால், ஜாஸ்மின் காதலித்த நபர் யார் என்பது தான் பலரையும் நெகிழ செய்துள்ளது.

இதுகுறித்து, ஜாஸ்மின் பேசியுள்ள வீடியோவின் படி, ஒரு நாள் ஷாப்பிங் செய்ய வேண்டி, சூப்பர் மார்க்கெட் ஒன்றிற்கு சென்றுள்ளார் அவர். அந்த சமயத்தில், சூப்பர் மார்க்கெட் அருகே வீடில்லாமல் வசிக்கும் வாலிபர் ஒருவரை கண்டுள்ளார். இதனை அறிந்து, அந்த நபருக்கு பண உதவி செய்ய முடிவு செய்துள்ளார் ஜாஸ்மின். ஆனால், பணம் வேண்டாம் என சொல்லி மறுத்து விட்டார் அந்த இளைஞர்.

தொடர்ந்து, உள்ளே சென்று ஷாப்பிங் செய்த ஜாஸ்மினுக்கு அந்த நபரின் முகம் தான் மனதில் ஓடிக் கொண்டே இருந்துள்ளது.

தனக்கு தேவையான பொருட்களை வாங்கிக் கொண்டு வெளியே வந்த ஜாஸ்மினனுக்கு, வெளியே இருந்த அந்த நபர், உதவிகளை செய்ய முன் வந்துள்ளார்.

அதன்படி, ஜாஸ்மின் கையில் இருந்த பைகளை எடுத்து டாக்சியில் வைத்தார். பிறகு, அவருக்கு உணவு வழங்கிக் கொடுக்க ஜாஸ்மின் முடிவு செய்யவே, அவரும் ஒத்துக் கொண்டார். இருவரும் ஹோட்டல் சென்று உணவருந்திய நிலையில், மொபைல் போன் ஒன்றையும் அந்த நபருக்கு பரிசளித்துள்ளார் ஜாஸ்மின். அந்த இளைஞரின் பெயர், மெக்காலே முர்ச்சி ஆகும்.

இதனையடுத்து, இருவரும் ஒருவருக்கு ஒருவர் சகஜமாக பழகி வந்துள்ள போது தான் தங்களுக்குள் காதல் மலர்ந்துள்ளதையும் அவர்கள் புரிந்து கொண்டுள்ளனர். தொடர்ந்து, அவர்கள் இணைந்து வாழவும் ஆரம்பித்து, தங்களின் இல்லற வாழ்க்கையை மிகவும் சிறப்பாக தங்களின் குழந்தைகளுடன் வாழ்ந்து வருகின்றனர்.

மெக்காலே இல்லை என்றால், எனது வாழ்க்கையே இல்லை என காதல் கணவரை நினைத்து உருகுகிறார் ஜாஸ்மின். சூப்பர் மார்க்கெட் வெளியே வீடு இல்லாமல், பொது இடத்தில் தங்கி வந்த நபர் மீது ஏற்பட்ட காதல், இன்று சிறப்பான வாழ்க்கையை ஜாஸ்மினுக்கு அமைத்துக் கொடுத்துள்ள நிலையில், நெட்டிசன்கள் பலரும் இந்த காதல் ஜோடிக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.