பூஜா ஹெக்டே..
தமிழில் நடிகை ஜீவாவுடன் முகமூடி படத்தில் முதன்முதலில் அறிமுகமானார். ஆனால் அப்படம் எதிர்பார்த்தபடி போகாததால் தெலுங்கு பக்கம் சென்றார். அங்கு அவருக்கு என்று ஒரு இடத்தை ஏற்படுத்திக் கொண்டார்.
அல்லு அர்ஜூனுக்கு ஜோடியாக அவர் நடித்து ஹிட் அடித்த ‘அல வைகுந்தபுரமுலோ’ படம் அவரை மேலும் பிரபலப்படுத்தியுள்ளது. மேலும் பல முன்னனி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்தார். அவருக்கென ரசிகர் பட்டாளமே உருவாக்கியுள்ளார்.
தமிழில் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியுள்ளார். விஜய்யுடன் பீஸ்ட் படத்தில் ஜோடி சேர்த்தார். அதன் மூலம் தமிழில் அடுத்தடுத்து கைவசம் நிறைய படங்கள் வைத்துள்ளார். பிஸ்ட் படத்தின் பாடல்கள் வெளியான நிலையில் அவரின் அழகான டான்ஸ் எல்லார் நெஞ்சத்திலும் ஒரு க்யுரியாஸ்டியை ஏற்படுத்தியுள்ளது.
சமூக வலைதளங்களிலும் தனது அப்டேட் களை பகிர்ந்து வரும் இவர் தற்போது படு ஸ்டைலான போட்டோ ஒன்றை ஸேர் செய்துள்ளார்.