செல்போனை பாக்கெட்டில் வைப்பதால் இவ்வளவு பாதிப்பா? உஷாரா இருங்க!!

715

செல்போன்…

மனிதர்களின் ஆறாம் விரலாக செல்போன் மாறிவிட்டது என கூறினால் அது மிகையாகாது! செல்போன் பல வகையில் நமக்கு நன்மைகள் செய்தாலும் நமது ஆரோக்கியத்தை கெடுக்கும் வேலைகளையும் செய்தே வருகிறது.

செல்போன்கள் மின்காந்த கதிர் வீச்சுகளோடு தொடர்புடையது. செல்போன்களை நாம் உடம்போடு ஒட்டி வைப்பதால் அது உடம்பிலும் கதிர் வீச்சுகளை வெளிப்படுத்தும். அப்படி கதிர் வீச்சுகளை வெளிப்படுத்துவதால் உடல் ஆரோக்கியம் கெட்டுப்போகும்.

பொதுவாக செல்போனை நமது உடலில் ஏதோ ஒரு இடத்தில் படும்படி தான் வைத்திருப்போம், அது எவ்வளவு தீங்கு விளைவிக்கும் தெரியுமா?

பின் பாக்கெட்

செல்போன்களை பெரும்பலான ஆண்கள் பின் பாக்கெட்டில் வைக்கின்றனர். இன்றைய காலக் கட்டத்தில் நாம் பயன்படுத்தும் பெரும்பாலான போன்கள் ஸ்கீரின் டைப் உள்ள போன்களாகவே இருக்கிறது.

தொடுதிரை அமைப்பினால் நமக்கே தெரியாமல் பலருக்கு அழைப்பு சென்று விடுவதற்கும் வாய்ப்பு அதிகம். சில நேரங்களில் அஜாக்கிரதை காரணமாக உடைந்து போவதற்கும் வாய்ப்பு இருக்கிறது. எனவே ஸ்டைலாக பின் பாக்கெட்டில் வைத்துக் கொண்டு சுற்றுவதைத் தவிர்க்கலாம்.

முன் பாக்கெட்

மருத்துவர்களின் பார்வையில் இது மிகவும் மோசமான பழக்கமாக பார்க்கப் படுகிறது. செல்போன்களில் வெளியிடும் கதிர் வீச்சுகளினால் ஆண்களுக்கு ஆண் தன்மையே கெட்டு விடும் ஆபத்தும் வருவதாகவும் கூறுகின்றனர்.

உயிரணுக்களின் தரம் குறைந்து போவது, அளவு குறைந்து போவது போன்ற கோளாறுகளை செல்போன் கதிர் வீச்சுகள் ஏற்படுத்தி விடுவதாக சில ஆய்வுகள் வெளியாகி இருக்கிறது. செல்போன்கள் அதிக வெப்பத்தை வெளியிடும் திறனைக் கொண்டது என்பதால் ஆண்களின் உடல் வெப்பமாகி இத்தனை சிக்கலையும் கொண்டு வந்துவிடும்.

சட்டைப் பாக்கெட்டில் செல்போன்களை வைப்பதால் சில நேரங்களில் இதயக் கோளாறையும் இது ஏற்படுத்தி விடுவதாகக் கூறப்படுகிறது.

இடுப்பு

இடுப்பு பகுதி, தொடை பகுதியை ஒட்டி இருக்குமாறு செல்போனை பயன்படுத்துவதால் இடும்பு பகுதியில் இருக்கும் எலும்புகள் மிகவும் பலவீனம் அடைந்து விடுவதாக மருத்துவர்கள் எச்சரிக்கை செய்கின்றனர். இடும்பு எலும்பு என்பது மனித உடலை தூக்கி நிறுத்தும் ஆதாரத் தன்மை கொண்டது. அந்த எலும்புகளே சுக்கு நூறாகிவிட்டால் மனிதர்களின் நிலைமை அவ்வளவுதான். இடும்பு எலும்பினை தொடும் வகையில் செல்போன்களை நெருக்கமாக பயன்படுத்தக் கூடாது எனவும் சுட்டிக் காட்டுகின்றனர்.

சருமப் பகுதி

பொதுவாக செல்போனில் பேசும்போது காது, கன்னம் போன்ற பகுதிகளை ஒட்டி வைத்தவாறு பயன்படுத்துகிறோம். இது அடிப்படையில் தவறு என்பதையும் மருத்துவர்கள் சுட்டிக் காட்டுகின்றனர். 0.5-1.5 சென்டி மீட்டர் இடைவெளி இருக்குமாறு வைத்துக் கொண்டு பேசவேண்டும். இதனால் கதிர் வீச்சுத் தன்மை சற்று குறைவாக இருக்கும். சரும பாதிப்பில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம்.

பட்டன் வைத்த போனை கண்டபடி உடம்போடு நெருக்கமாக வைத்து இருந்தாலும் இதுதான் நிலைமை. பட்டன் போன்களில் பாக்டீரியாக்கள் தங்கியிருப்பதற்கு அதிக வாய்ப்பு இருக்கிறது. எனவே இதையும் தவிர்க்க வேண்டும்.