செஸ் போட்டியில் சாதித்த தமிழ்ச் சிறுவன்!

623

செஸ் போட்டியில் மிகக் குறைந்த வயதில் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்ற முதல் இந்தியச் சிறுவன் என்ற பெருமையை சென்னையைச் சேர்ந்த ஆர்.பிரக்னாநந்தா பெற்றுள்ளார்.

ஒட்டுமொத்தமாக உலக அளவில் மிகக் குறைந்த வயதில் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்ற 2-வது சிறுவன் எனும் பெருமையையும் ஆர் பிரக்னாநந்தா பெற்றுள்ளார்.

இத்தாலியில் ஓர்டிசி நகரில் நடந்த கிரிடைன் ஓபன் செஸ் போட்டியில் இறுதிச்சுற்றில் இத்தாலி வீரர் லூக்கா முரானியை வீழ்த்தி இந்த வெற்றியை பதிவு செய்துள்ளார்.

போட்டியின் 8 சுற்றுகள் நிறைவடைந்த நிலையில் 6.5 புள்ளிகளை பிரக்னாநந்தா பெற்றுள்ளதாக தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கடந்த 2017 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் டிராவிசியோ நகரில் நடந்த உலக ஜூனியர் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் கிராண்ட் மாஸ்டர் பட்டத்துக்காக பிரக்னாநந்தா பரிந்துரைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.