சொந்தமாக ஹெலிகாப்டரை உருவாக்கிய இளைஞர்: சோகத்தில் முடிந்த சாதனை முயற்சி!!

281

மகாராஷ்டிரா…

மகாராஷ்டிரா மாநிலம் ஃபுலாஸ்வங்கி என்ற பகுதியில் இளைஞர் ஒருவர் சொந்தமாக ஹெலிகாப்டர் தயாரிக்க மேற்கொண்ட முயற்சி சோகத்தில் முடிவடைந்தது.

நாட்டின் 75-ஆவது சுதந்திர தினத்தில் தான் வடிவமைத்த ஹெலிகாப்டரை பறக்க விட வேண்டும் என்பதற்காக ஷேக் இஸ்மாயில் என்ற இளைஞர் தீவிர முயற்சியில் இறங்கியிருந்தார்.

முழுமையாக ஹெலிகாப்டர் தயாரான நிலையில், முன்னோட்டத்திற்காக அதனை இயக்கினார்.

அப்போது எதிர்பாராதவிதமாக ஹெலிகாப்டரின் பிளேடுகள் உடைந்து ஷேக் இஸ்மாயில் கழுத்தில் பாய்ந்தது.

இதில் படுகாயமடைந்த அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார்.