சைனிங் உடையில் கட்டழகை காட்டும் பிரியாமணி!!

185

பெங்களூரில் பிறந்து வளர்ந்து தமிழ், தெலுங்கு, கன்னட மற்றும் மலையாள திரைப்படங்களில் நடித்து ரசிகர்களிடம் பிரபலமானவர் பிரியாமணி. இவரை அறிமுகம் செய்தததே பாரதிராஜாதான். பாலுமகேந்திரா இயக்கத்திலும் நடித்தார். ஆனால், தமிழ் சினிமாவில் இவர் கிளிக் ஆகவில்லை.

அதாவது விஜய், அஜித், சூர்யா போன்ற நடிகர்களின் படங்களின் நடிக்கும் வாய்ப்பு பிரியாமணிக்கு கிடைக்கவில்லை. இதை விரக்தியாக ஒரு பேட்டியிலேயே அவர் சொல்லி இருந்தார். ஆனாலும், அமீரின் இயக்கத்தில் கார்த்தி அறிமுகமான பருத்தி வீரன் படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி சிறந்த நடிகைக்கான தேசிய விருதையும் வாங்கினார்.

அதன்பின்னரும் தமிழில் பெரிய வாய்ப்புகள் பிரியாமணிக்கு கிடைக்கவில்லை. எனவே, தெலுங்கு சினிமா பக்கம் சென்று நடிக்க துவங்கினார். தெலுங்கில் வாய்ப்புகளை பெறுவதற்காக படுகவர்ச்சியாக நடிக்கவும் துவங்கினார். சில படங்களில் பிகினி உடைகளிலும் வந்து ஆந்திராவை அலறவிட்டார்.

நிறைய கன்னட படங்களிலும் நடித்திருக்கிறார். ஒருகட்டத்தில் திருமணம் செய்து கொண்டு பெங்களூரில் செட்டில் ஆனார். அதன்பின் டிவி நிகழ்ச்சிகளில் ஜட்ஜாக வர துவங்கினார். குறிப்பாக நடன நிகழ்ச்சிகளுக்கு ஜட்ஜாக வந்தார். சமீபகாலமாக மீண்டும் சினிமாவில் நடிக்க துவங்கியிருக்கிறார்.

மேலும், எப்படியாவது மீண்டும் சினிமாவில் ஒரு இடத்தை பிடிக்க ஆசைப்படும் பிரியாமணி சமீபமாகவே கவர்ச்சி உடைகளில் அழகை காட்டி தொடர்ந்து போட்டோக்களை ஷேர் செய்து வருகிறார். அந்தவகையில், டார்க் ரெட் புடவையில் அழகை காட்டி புகைப்படங்களை வெளியிட்டிருக்கிறார்.