இராணுவ மேஜரின் மனைவி கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள மற்றொரு இராணுவ மேஜர் கொலை செய்யப்பட்ட பெண்ணுக்கு 6 மாதங்களில் 3500 போன் கால் செய்துள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
டெல்லியின் மேற்கு பகுதியில் வசித்து வருபவர் இராணுவ மேஜர் அமித் திவிவேதி. இவரின் மனைவியான சைலஜா கடந்த சனிக்கிழமை டெல்லி கண்டோன்மென்ட் மெட்ரோ ரயில் நிலையம் அருகே முகம் சிதைக்கப்பட்டு, கொடூரமான முறையில் இறந்து கிடந்தார்.
இது தொடர்பாக பொலிசார் விசாரணை மேற்கொண்ட போது, மற்றொரு இராணுவ மேஜரான நிக்கல் ஹண்டா தலைமறைவாகியிருப்பது தெரியவந்தது.
இதையடுத்து பொலிசார் நடத்திய தீவிர தேடுதல் வேட்டைக்கு பின் அவர் உத்தரபிரதேச மாநிலம், மீரட் நகரில் பதுங்கி இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து பொலிசார் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியதால், இது தொடர்பான வழக்கு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
அப்போது சில பரபரப்பான தகவல்கள் வெளியாகியுள்ளது. அதாவது சைலஜாவை கொலை செய்த இராணுவ மேஜர் நிகில் ஹண்டே கடந்த ஜனவரி மாதம் முதல் கொலை நடந்த நாள்வரை 3500 முறை சைலஜாவுடன் தொலைபேசியில் பேசியிருக்கிறார்
இத்தனை அதிகமான போன் கால்களை செய்திருப்பதன் மூலம் அவர் சைலஜா மீது அதீத பற்று கொண்டிருந்ததாகத் தெரிவதாக வழக்கை விசாரித்து வரும் பொலிஸ் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
கடந்த 2015-ஆம் ஆண்டு சைலஜாவின் கணவர் அமித் திவிவேதி நாகலாந்தில் பணி புரிந்து வந்துள்ளார். அங்குதான் நிகில் ஹண்டாவுக்கு சைலஜாவுக்கும் நட்பு ஏற்பட்டிருக்கிறது.
ஒருகட்டத்தில் அமித்துக்கு டெல்லிக்கு பணியிட மாறுதலாகியுள்ளது. ஆனாலும் நிகில்-சைலஜா தொலைபேசியில் பேசிக்கொண்டிருந்துள்ளனர்.
அப்போது டெல்லி வந்த நிகில் சைலஜாவின் திருமணம் செய்து கொள்ளும் படி கூறவே, அவர் மறுப்பு தெரிவிக்கவே இது கொலையில் போய் முடிந்துள்ளது என்பது தெளிவாகியுள்ளது.
மேலும் சைலஜாவும் நிகிலும் ஒருநாள் வீடியோ காலில் பேசிக் கொண்டிருப்பதைக் மேஜர் திவிவேதி கவனித்து இருவரையும் கண்டித்துள்ளார்.
அதன் பின் மேஜர் ஹண்டாவையும் வன்மையாகக் கண்டித்தும் இருக்கிறார். தனது வாழ்க்கையில் குறுக்கிட வேண்டாம் எனவும் எச்சரித்திருக்கிறார்.
இதேபோல், மேஜர் நிகில் ஹண்டாவின் மனைவியும் நிகிலுடன் அவ்வப்போது சண்டையிட்டு வந்திருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.