சொகுசு வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு திட்டம் போட்டு காதலனுடன் செய்த மோசமான செயல் : பொலிசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி!!

1066

கன்னியாகுமரி….

தமிழகத்தில் கணவனுக்கு தெரியாமல், காதலனுடன் இணைந்து மனைவி கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் சேரமங்கலம் பகுதியை சேர்ந்தவர் பேபிசுதா. இவர் தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வருகிறார். இவரின் கணவர் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார்.

இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். பேபிசுதா தன் குழந்தைகளுடன் தனியாக வசித்து வருகிறார். இந்நிலையில், கடந்த ஜனவரி மாதம், பெத்தேல்புரத்தில் வசித்து வரும் பேபிசுதாவின் தம்பி சுதர் என்பவரின் மனைவி ஷர்மிளிமோள் கோவில் திருவிழா காரணமாக அழைத்துள்ளார்.

பேபி சுதாவும் தன் குழந்தைகளுடன் விருந்திற்கு சென்றுள்ளார். திருவிழா முடிந்து தனது வீட்டிற்கு திரும்பிய போது, வீட்டின் பின்பக்க கதவுகள் மற்றும் அறை கதவுகள் உடைக்கப்பட்டு கிடப்பதைக் கண்டு கடும் அதிர்ச்சியடைந்துள்ளார்.

அதன் பின் உள்ளே சென்று பார்த்த போது, பீரோவில் இருந்த 50-சவரன் தங்க நகைகள் கொள்ளை போனது தெரிய வந்தது. உடனடியாக இது குறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். பொலிசார் இது குறித்து கடந்த 7-மாதங்களாக தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டு எந்த ஒரு தடயமும் கிடைக்கவில்லை.

கொள்ளை நடந்த தினத்தில் அந்த பகுதியில் கிடைத்த செல்போன் சிக்னல்களை ஆராய்ந்த போது, பெத்தேல்புரம் பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவரின் செல்போன் எண்ணும் கிடைத்துள்ளது. அந்த வாலிபர் பெத்தேல்புரம் பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவரிடம் அடிக்கடி பேசி கொண்டிருந்ததையும் கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து, பெத்தேல்புரம் சென்ற தனிப்படை பொலிசார் இன்று காலை அந்த வாலிபரையும் அவருடன் இருந்த இளம்பெண் ஒருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

விசாரணையில் கைதான வாலிபர் பெத்தேல்புரம் பகுதியை சேர்ந்த 27-வயதான ஏரோநாட்டிக்கல் என்ஜீனியரான பபின் என்பதும், அவுஸ்திரேலியாவில் வேலை பார்த்து வந்த இவர் கொரோனா நோய் தொற்றால் வேலையிழந்து சொந்த ஊருக்கு திரும்பியது தெரிய வந்தது.

அவருடன் அதே பகுதியைச் சேர்ந்த ஷர்மிளி மோள் என்பவரும் கைது செய்யப்பட்டார். அவுஸ்திரேலியாவில் இருந்து பபின் திரும்பியதும், பபினுடன் பக்கத்து வீட்டில் வசித்த ஷர்மிளி மோளுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இவர்களின் பழக்கம் நாளைடைவில் நெருக்கமாக மாறியுள்ளது. ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்ட இந்த ஜோடி, தனது கணவரின் சகோதரியான பேபி சுதா, நல்ல வசதியுடன் வாழ்ந்து வருவதால், அவரின் வீட்டில் கொள்ளையடிக்க திட்டமிட்டுள்ளனர்.

திட்டப்படி பேபி சுதாவை ஷர்மிளி மோள், தன் வீட்டுக்கு விருந்துக்கு அழைத்துள்ளார். இந்த சமயத்தில் பேபி சுதாவின் வீட்டுக்கு சென்ற பபின் 50 பவுன் நகைகளை கொள்ளையடித்திருப்பது தெரியவந்துள்ளது.

தொடர்ந்து, ஷர்மிளி மோள் தனது கணவரிடம் வேலைக்காக நேர்முக தேர்வுக்காக சென்னை செல்வதாக கூறி வீட்டை விட்டு வெளியேறியிருக்கிறார்.

இருவரும் நகைகளை விற்று ஊட்டியில் சொகுசு வீடு வாடகைக்கு எடுத்து உல்லாசமாக பல நாட்கள் இருந்துள்ளனர். நகைகளை விற்ற பணத்தில் தனது நிலத்தில் பபின், தான் கட்டிக் கொண்டிருந்த வீட்டை கட்டி முடித்து கிரக பிரவேசமும் செய்துள்ளார்.

இந்த வீட்டிலேயே கணவன் மனைவி போல வாழ்ந்து வந்த நிலையில்தான், இருவரும் பிடிப்டட்டுள்ளனர். திருடப்பட்ட 50 பவுன் நகைகளையும் அவர்கள் விற்ற இடத்தில் இருந்து பொலிசார் மீட்டனர்.