நடிகை ஐஸ்வர்யா ராய் பழைய பகையை மறந்து சோனம் கபூரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.பாலிவுட் நடிகை சோனம் கபூர் தனது காதலரான ஆனந்த் அஹுஜாவை நேற்று திருமணம் செய்து கொண்டார். அவர்களின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நேற்று மாலை மும்பையில் உள்ள ஹோட்டல் ஒன்றில் நடைபெற்றது.
வரவேற்பு நிகழ்ச்சியில் பாலிவுட் பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர். சோனம் கபூர் தன்னை ஆன்ட்டி என்று கூறியது, மேலும் தான் கேன்ஸ் திரைப்பட விழாவில் கண்ணை பறிக்கும் நிறத்தில் லிப்ஸ்டிக் போட்டிருந்ததை விமர்சித்தது ஆகிய காரணங்களால் ஐஸ்வர்யா ராய் கடும் கோபத்தில் இருந்தார்.
பழைய பகையை மறந்து சோனம் கபூர் ஐஸ்வர்யா ராயை தனது திருமணத்திற்கு வருமாறு போன் செய்து அழைத்தார். ஆனால் ஐஸ்வர்யா ராய் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை.
திருமணத்திற்கு வராத ஐஸ்வர்யா ராய் வரவேற்பு நிகழ்ச்சிக்கு தனது கணவர் அபிஷேக் பச்சனுடன் வந்திருந்தார்.சோனம் கபூரின் திருமணத்திற்கு அபிஷேக் பச்சன் தனது தந்தை, சகோதரியுடன் சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.