ஜன்னல் வழியே..
கேரளாவில் தனிமை வார்டில் அனுமதிக்கப்பட்ட நபர் ஒருவர், தனது தந்தையின் இறுதிச்சடங்கில் கூட பங்கேற்க முடியாமல் போனது குறித்து மனம் நொந்துள்ளார்.
இடுக்கி மாவட்டத்தின் தொடுபுழா பகுதியை சேர்ந்தவர் லினோ ஏபல், கத்தாரில் வேலை செய்து வரும் லினோவின் தந்தைக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது.
இதனால் உடனடியாக விடுப்பு எடுத்துக் கொண்டு மார்ச் 8ம் திகதி சொந்த ஊருக்கு திரும்பினார், அப்போது கொரோனா பரவிக் கொண்டிருந்த காலம் என்பதாலும் லினோவுக்கு சளி, இருமல் இருந்ததாலும் தானாகவே முன்வந்து விமான நிலையத்திலிருந்து நேராக கோட்டயம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சென்றார்.
அங்கு அவர் கொரோனா பரிசோதனை முடிவுக்காகக் காத்திருந்த நிலையில், அவரைத் தனிமை வார்டில் அனுமதித்தனர். அந்தச் சமயம் அவரது தந்தையும் அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். ஆனால் அவரைப் பார்க்க லினோவால் முடியவில்லை. மறுநாள் (மார்ச் 9-ம் தேதி) லினோவின் தந்தைக்கு ஸ்ட்ரோக் ஏற்பட்டதுடன் உ யிரிழந்தார்.
அவரது உடல், லினோ அனுமதிக்கப்பட்ட தனிமை வார்டுக்கு எதிரில் இருந்த பிணவறைக்குக் கொண்டு செல்லப்பட்டு உடற்கூறாய்வு முடிந்து குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. தன் வார்டுக்கு முன்பாக இருந்து ஆம்புலன்ஸில் தந்தையின் உடல் எடுத்துச் செல்வதை ஜன்னல் வழியாகப்பார்த்து லினோ கண்ணீர் வடித்தார்.
தனது தந்தையின் முகத்தை கடைசியாக கூட பார்க்க முடியாத இந்த நிலையில் வாழ்நாள் முழுதும் மறக்க மாட்டேன் என கூறும் லினோ, ஒருவேளை தனக்கு கொரோனா இருந்தால் குடும்பத்தினரும், நண்பர்களும் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காகவே தாமாக முன்வந்து பரிசோதனை செய்து கொண்டதாக தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் கடந்த 11ம் திகதி லினோவுக்கும், கீத்து என்ற பெண்ணுக்கும் நெருங்கிய உறவினர்கள் 20 பேர் மட்டுமே கலந்து கொள்ள இனிதே திருமணம் நடந்து முடிந்தது.