ஜோக்கர் பட நடிகைக்கு கல்யாணம்! மாப்பிள்ளை இவர் தானாம்!!

792

ஜோக்கர் படத்தை நாம் மறக்கிறோமோ இல்லையோ அரசியல் வாதிகள் மறக்க மாட்டார்கள். ராஜூ முருகன் இயக்கத்தில் 2016 ல் குருசோமசுந்தரம், ரம்யா பாண்டியன், காயத்திரி கிருஷ்ணன் நடிப்பில் வெளியானது.

தேர்தலுக்கு முன்பே வெளியாக வேண்டிய படம் ஆனால் நிறுத்தி வைக்கப்பட்டு பின் வெளியானது. ஆனாலும் படத்திற்கு நல்ல வரவேற்பு, 2 தேசிய விருதுகள் கிடைத்தது.

இப்படத்தை இசை கேரக்டரில் நடித்தவர் காயத்திரி. தமிழில் இதுவே இவருக்கு முதல் படம். ஆனால் இவர் நிறைய மலையாள படங்களில் நடித்து வருகிறார்.

இவருக்கும் ஒளிப்பதிவாளர் கோபன் ஜீவன் ராஜுக்கும் காதல் இருந்து வருகிறது. விட்டார் சம்மதத்துடன் இருவரும் கடந்த ஏப்ரல் 2 ல் நிச்சயதார்த்தம் செய்துகொண்டனர்.

திருமணம் அடுத்த ஆண்டில் நடைபெற இருக்கிறதாம்.