தமிழகத்தின்…
தமிழகத்தின் முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்ற நிலையில், பிரபல திரைப்பட இயக்குனர் அமுதன், ஜோசியம் எல்லாம் பொய் என்பது அதிகாரப்பூர்வமாக தெரிந்துவிட்டதாக தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஏப்ரல் மாதம் 6-ஆம் திகதி தமிழகத்தின் 234 தொகுதிகளுக்கான சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலுக்கான முடிவு கடந்த 2-ஆம் திகதி முடிவு பெற்றது.
இதில் ஸ்டாலின் தலைமையிலான திமுக கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெரும்பான்மையுடன் தமிழகத்தில் ஆட்சி அமைத்துள்ளது. நேற்று முதலமைச்சர் பதவியை ஸ்டாலின் ஏற்றுக் கொண்டார்.
இந்நிலையில், தேர்தலுக்கு முன்பு முதல்வராகும் அமைப்பு ஸ்டாலின் ஜாதகத்தில் இல்லை என அதிமுக அமைச்சர்களே பலமுறை கூறி வந்தனர். அவர்கள் மட்டுமின்றி, பா.ஜ.கவினரும் ஸ்டாலின் ஜாதகத்தில் முதல்வராகும் ராசியில்லை என்று குறிப்பிட்டு வந்தனர்.
…and now officially, astrology is a fraud.
— CS Amudhan (@csamudhan) May 7, 2021
தற்போது ஸ்டாலின் முதல்வர் ஆகிவிட்டதால், மிர்ச்சி சிவாவை வைத்து தமிழ் படம் எடுத்த பிரபல இயக்குனர் சி.எஸ்.அமுதன் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், ஸ்டாலின் தமிழக முதல்வராக முடியாது என தெரிவித்து வந்தனர். இந்நிலையில் ஸ்டாலின் தற்போது முதல்வராகி, ஜாதகத்தை பொய்யாக்கியுள்ளார் என்று குறிப்பிட்டுள்ளார்.