ஞாபக மறதி பிரச்சனையால் அவதியா? உங்கள் நினைவாற்றலை மேம்படுத்த இதை சாப்பிடுங்கள்!!

670

ஞாபக மறதி…

ஞாபக மறதி பிரச்சினையால் தற்போது பெரும்பாலானோர் அவதிப்படுகின்றனர். எடுத்துகாட்டுக்கு கையில் வைத்திக்கும் ரிமோட், செல்போனை வீட்டில் எங்கேயோ வைத்துவிட்டு அதை மணிக்கணக்கில் நாம் பலரும் தேடியிருப்போம்.

 

ஞாபக மறதிக்கு வாழ்க்கை முறை மற்றும் உணவு முறையும் முக்கிய காரணமாக இருக்கிறது. ஞாபக சக்தியை அதிகரிக்க உங்கள் உணவில் சில முக்கிய உணவுகளை சேர்க்க வேண்டும் என டயட்டீஷியன் மேக் சிங்கின் கூறுகிறார்.

 

கீரைகள்

 

கீரையில் இரும்பு சத்துக்கள் அடங்கியுள்ளது. மேலும் மெக்னீசியம் மற்றும் ஃபோலேட்டின் வளமான ஆதாரங்களில் ஒன்றாக கீரை இருப்பதால், நமது நினைவாற்றலை பராமரிக்க உதவுகிறது. எனவே தினமும் ஏதாவது ஒரு வகை கீரையை உணவில் சேர்த்து கொள்ளலாம்.

தயிர்

 

தயிர் நினைவாற்றல் அதிகரிக்க உதவுகிறது. ஒரு நாளைக்கு இரண்டு முறை தயிர் சாப்பிடும் பெண்களிடம் யுசிஎல்ஏ நடத்திய ஆய்வு ஒன்றில், அவர்களின் மூளை செயல்பாட்டில் மாற்றம் இருப்பதை கண்டறிந்துள்ளனர். மேலும் தயிரில் குடல் ஆரோக்கியதை மேம்படுத்தும் ப்ரீபயாடிக் உள்ளது. எனவே, உங்கள் மூளை ஆரோக்கியத்திற்கு தினமும் தயிர் சாப்பிடலாம்.

மீன்

 

மீன் அயோடின், செலினியம் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகளின் நல்ல ஆதாரமாகும். மூளையின் செயல்பாட்டிற்கு தேவையான அனைத்து சத்துக்களும் இதில் உள்ளன. எனவே வாரம் இரண்டு முறை மீன் உணவுகளை சாப்பிடுவது நல்லது.

முட்டை

 

தினமும் ஒரு முட்டை சாப்பிடுவது அனைத்து வயதினருக்கும் நல்லது. மஞ்சள் கருவில் வைட்டமின் டி, வைட்டமின் பி 12, மெக்னீசியம் மற்றும் துத்தநாகம் நிறைந்திருப்பதால் இது மூளை ஆரோக்கியத்திற்கு நல்லது. எனவே தினமும் ஒரு வேகவைத்த முட்டை சாப்பிடலாம்.