திண்டிவனம்…
திண்டிவனம் மேம்பாலத்தின் கீழ் பகுதியில் அரசு மதுபான கடை ஒன்று இயங்கி வருகின்றது.
இந்த கடையில் நேற்று இரவு ஒரு நபர் மதுபானம் வாங்க வந்தார் . அப்போது அவருக்கும், கடை ஊழியர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
அதனால் அவர்களை மிரட்டி விட்டு அங்கிருந்து சென்ற அந்த நபர் இரவு 10 மணிக்கு மேல் 10-க்கும் மேற்பட்ட நபர்களை அழைத்து வந்து ரகளையில் ஈடுபட்டார்.
அப்போது அங்கிருந்த பீர் பாட்டிலை எடுத்து உடைத்து கடை ஊழியர்களை குத்தி கொலை செய்ய முயன்றதாக கூறப்படுகின்றது. இதனால் கடை ஊழியர்கள் மற்றும் மது வாங்க வந்தவர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸாரை கண்டவுடன் ரகளையில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து தப்பித்துச் சென்றனர்.
இதுகுறித்து திண்டிவனம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அரசு மதுபானக் கடையில் மது வாங்க வந்த கும்பல் அங்கிருந்த ஊழியர்களைக் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.