டியூசன் சென்ற சிறுமிக்கு நேர்ந்த பரிதாபம் : சோகத்தில் ஆழ்த்திய சம்பவம்!!

281

உத்தர பிரதேசம்…

உத்தர பிரதேச மாநிலம் முசாபர்நகர் மாவட்டத்தில் உள்ள சாத்பூர் கிராமத்தைச் சேர்ந்த மாணவி ஒருவர் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். அந்த மாணவி சம்பவத்தன்று மாலை டியூசனுக்கு சென்றுள்ளார்.

இந்நிலையில்,வெகுநேரம் ஆகியும் மாணவி வீடு திரும்பாததால் அச்சம் அடைந்த மாணவியின் பெற்றோர் தேடுதலில் ஈடுபட்டனர். அப்போது, அருகில் இருந்த காட்டுக்குள் மாணவி மயங்கிய நிலையில் கிடப்பதை கண்டனர்.

உடனடியாக, அங்கிருந்து மீட்கப்பட்ட மாணவி மயக்கம் தெளிந்த பிறகு, தனக்கு நேர்ந்த கொடுமைகளை கூறினார்.

டியூசன் சென்று கொண்டிருந்த போது, இடைமறித்த 2 நபர்கள் வலுக்கட்டாயமாக எனக்கு மதுவை புகட்டி அருகில் உள்ள காட்டுக்குள் இழுத்துச் சென்றனர்.

அங்கு இவர்களுடன் மேலும் 2 பேர் இணைந்து கொண்டு என்னை பாலியல் துன்புறுத்தல் செய்ததாக அந்த சிறுமி பெற்றோரிடம் கூறினார்.

இதுதொடர்பாக சிறுமியின் குடும்பத்தார் அளித்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டனர்.

தொடர்ந்து, இந்த கொடூர செயலில் ஈடுபட்ட 2 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் இருவரை வலைவீசி தேடி வருகின்றனர்.