டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வீரர் ஸ்டுவர்ட் ப்ராட் புதிய சாதனை!!

698

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் அரங்கில் 400 விக்கெட்டுகளை வீழ்த்தி இங்கிலாந்து வீரர் ஸ்டுவர்ட் ப்ராட் (Stuart Broad) சாதனை படைத்துள்ளார். டெஸ்ட் அரங்கில் 400 விக்கெட்டுகள் எடுக்கும் 2வது இங்கிலாந்து வீரர் இவராவார்.

நியூசிலாந்து-இங்கிலாந்து அணிகள் மோதும் பகலிரவு முதல் டெஸ்ட் போட்டி ஆக்லாந்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சு தேர்வு செய்தது.

முதலில் விளையாடிய இங்கிலாந்து அணி நியூசிலாந்து வீரர் ட்ரெண்ட் போல்ட்-ன் அபார பந்துவீச்சால் விக்கெட்டுகளை இழந்து 58ரன்களுக்குள் சுருண்டது.

இதனையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய நியூசிலாந்து அணியில் தொடக்க வீரர்கள் ஏமாற்றமளிக்க கேப்டன் வில்லியம்சன் நேர்த்தியாக விளையாடி 91ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.

முதல் நாள் ஆட்டநேர முடிவில், நியூசிலாந்து அணி 175ரன்கள் எடுத்தது. இதன்மூலம் அந்த அணி 117 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

இந்தப் போட்டியில் நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் விளையாடிய போது, இங்கிலாந்து பந்துவீச்சாளர் ஸ்டுவர்ட் ப்ராட் (Stuart Broad) நியூசிலாந்தின் டாம் லாதமை 26ரன்களில் வெளியேற்றினார். இதன்மூலம், சர்வதேச டெஸ்ட் அரங்கில் தனது 400வது விக்கெட்டை பதிவு செய்தார்.

மேலும், 400வது டெஸ்ட் விக்கெட் வீழ்த்திய 2வது இங்கிலாந்து வீரர் என்ற சாதனையையும் Stuart Broad படைத்தார். ஒட்டுமொத்தமாக 400வது விக்கெட் வீழ்த்திய 15வது வீரர் Stuart Broad ஆவார்.