டெல்லி…
திருமணமான தங்கையின் கள்ள காதலனை கொடூரமாக அடித்து பலமுறை கத்தியால் குத்திய சகோதரனின் செயல் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
கிழக்கு டெல்லியில் உள்ள சீமாபுரியில் கொலை நிகழ்ந்துள்ளதாக கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் வந்துள்ளதாக அங்கு சென்ற போலீசார் கொலை குறித்து விசாரணை நடத்த தொடங்கினார்.
24வயது இளைஞர் ஷாருக் என்பவரை 3 பேர் கொண்ட கும்பல் கொடூரமாக தாக்கி இறுதியில் கத்தியால் நிதானமாக பலமுறை குத்தும் வீடியோ காவல்துறைக்கு கிடைத்துள்ளது.
இதனை ஆதாரமாக வைத்து கொலையாளிகளில் 2 பேரை டெல்லி காவல்துறை கைது செய்துள்ளது. அவர்களை போலீசார் விசாரித்து போது இது கள்ள காதல் கொலை என்பது தெரியவந்துள்ளது.
அதாவது, குற்றவாளி இருவரில் ஒருவரின் தங்கை கொலை செய்யப்பட்ட ஷாருக்குடன், கள்ள தொடர்பில் இருந்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த பெண்ணின் அண்ணன் கள்ள காதலனை கொலை செய்ய திட்டமிட்டு நண்பர்களுடன் சேர்ந்து இரும்பு நாற்காலிகள் மூலம் கொடூரமாக தாக்கி, கத்தியால் குத்திக் குத்தினார்.
இதில் படுகாயமடைந்த ஷாருக், குரு தேக் பகதூர் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். ஆனால் அவர் ஏற்கனவே இறந்து விட்டார் என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
இது தொடர்பாக கிழக்கு டெல்லி காவல் ஆணையர் கூறும் போது, ஷாருக் என்பவர் பல்வேறு வழக்குகள் உள்ள குற்றவாளி. மேலும் அவரை கொலை செய்தவர்கள் ஜாபர், ஜூபார் மற்றும் ஆதித்யா என அடையாளம் காணப்பட்டு அதில் ஆதித்யா மற்றும் ஜூபார் கைது செய்யப்பட்டுள்ளனர்.