தங்கையுடன் வாழ மறுத்த மைத்துனர்… காரை ஏற்றி கொல்ல முயற்சித்த அண்ணன் : திகில் சம்பவம்!!

311

திருப்பூர்….

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே சித்தம்பலம் கணபதி நகரை சேர்ந்தவர் புஷ்பநாதன். இவர் பல்லடத்தில் உள்ள பிரபல நிறுவனமொன்றில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். நீலகிரி மாவட்டம் ஊட்டி கேத்தி பகுதியைச் சேர்ந்த வினோதினி என்பவருக்கும் திருமணம் நடந்து ஏழு ஆண்டுகள் ஆகிறது. திருமணமாகி மூன்றே மாதத்தில் கணவன் மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக வினோதினி ஊட்டியில் உள்ள தனது பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார்.

மேலும் மனைவி வினோதினியிடம் இருந்து விவாகரத்து கேட்டு புஷ்பநாதன் தொடர்ந்த வழக்கு திருப்பூர் நீதிமன்றத்திலும் கணவனுடன் சேர்ந்து வாழ வேண்டும் எனக் கேட்டு வினோதினி தொடர்ந்த வழக்கு பல்லடம் நீதிமன்றத்திலும் கடந்த சில வருடங்களாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கடந்த சனிக்கிழமை அன்று மாலை புஷ்பநாதன் வீட்டில் இல்லாதபோது கணபதி நகர் பகுதிக்குள் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்துவது போல் டிப்டாப் உடையணிந்த ஆசாமி ஒருவன் கழுத்தில் அடையாள அட்டை அணிந்தும் அங்கு வந்த மர்ம நபர் புஷ்பநாதனின் வீட்டினுள் நுழைந்து அங்கு இருந்த அவரது உறவினர்களிடம் புஷ்பநாதனின் ஆதார் அட்டை, குடும்ப அட்டை உள்ளிட்ட விவரங்கள் குறித்து கேட்டதாகவும்,

தற்போது அவரோடு யார் யார் வசிக்கிறார்கள் என்ற விவரங்களை கேட்டு தெரிந்து கொண்டதாகவும், மேலும் அதே வீதியில் உள்ள இரண்டு மூன்று வீடுகளுக்கும் சென்று, அங்கும் இதே போல் விசாரணை நடத்தி விட்டு சென்றதாக கூறப்படுகிறது.

அப்போது அங்கு வந்த புஷ்பநாதனின் மைத்துனரான குரு என்பவர் ஓட்டிக் கொண்டு வந்த சொகுசு காரில் இந்த டிப்டாப் ஆசாமி ஏறிச் செல்வதை எதிர்பாராதவிதமாக அவ்வழியே வந்த புஷ்பநாதன் பார்த்துள்ளார்.

இதையடுத்து ஊட்டியில் இருந்த மைத்துனன் குரு மர்ம ஆசாயுடன்ன் எதற்காக தனது வீட்டு பகுதிக்கு வந்தார், எதற்காக தன்னை கண்டதும் காரில் வேகமாக செல்கிறார்கள் என்பது குறித்து அறிய காரை பின்தொடர்ந்து உடுமலை சாலையில் சென்றுள்ளார்.

சித்தம்பலம் பிரிவில் இருந்து சுமார் 3 கிலோ மீட்டர் தொலைவு வரை சென்ற கார் பின்தொடர்ந்து புஷ்பநாதன் இருசக்கர வாகனத்தில் வருவதை கண்டு திரும்பி புஷ்பநாதனை நோக்கி அதிவேகமாக வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த புஷ்பநாதன் உடனே தனது இரு சக்கர வாகனத்தை ரோட்டோரம் காட்டுப்பகுதிக்குள் ஓட்டிச் சென்று விழுந்ததாகவும், இதையடுத்து அந்த சொகுசு கார் நிற்காமல் அதிவேகமாக பல்லடம் நோக்கி சென்று விட்டதாகவும் கூறப்படுகிறது.

தானும் தனது மனைவியும் விவாகரத்து கேட்டும் சேர்ந்து வாழ கோரியும் திருப்பூர் மற்றும் பல்லடம் நீதிமன்றங்களில் இரண்டு வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், ஊட்டியிலிருந்து தனது மைத்துனர் ஒரு அரசு அதிகாரி போல டிப்டாப் ஆசாமியை செட்டப் செய்து தனது வீட்டிற்கும் தனக்கு சந்தேகம் ஏற்படாமல் இருக்க பக்கத்து வீடுகளுக்கும் அனுப்பிவைத்து தனக்கு வேறு ஒரு திருமணம் நடந்துள்ளதா என்பது குறித்து தெரிந்து கொள்ளவும்,

ஆவணங்களை சரி பார்த்து விட்டு மர்ம ஆசாமியை வரவழைத்து தயாராக மைத்துனர் ஒரு தனது காரில் ஏற்றிக் கொண்டு சென்றதும், பின் தொடர்ந்து சென்ற தன்னை காரை ஏற்றி கொலை செய்ய முயற்சித்தது குறித்தும் அன்றே பல்லடம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததாக கூறப்படுகிறது.

ஆனால் புகாரை பெற்றுக்கொண்ட பல்லடம் போலீசார் அதன் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் கடந்த 4 நாட்களாக தன்னை அலைக்கழித்து வருவதாகவும் இனியும் காலதாமதம் செய்யாமல் பல்லடம் போலீசார் தான் கொடுத்த புகாரின் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்து பதிவு எண் இல்லாத சொகுசு வாகனத்தை,

பறிமுதல் செய்து தன்னை காரை ஏற்றி கொலை செய்ய முயன்று வீட்டில் இருந்த ஆவணங்களை அத்துமீறி சோதனையிட்ட மைத்துனர் குரு, மற்றும் டிப்டாப் ஆசாமி உள்பட இருவரையும் கைது செய்து தனக்கு நியாயம் வழங்க வேண்டுமென அவர் போலீசாருக்கு கோரிக்கை வைத்துள்ளார்.

பல்லடத்தில் குடும்பத்தகராறு காரணமாக கணவனும் மனைவியும் பிரிந்து வாழ்ந்து வரும் சூழலில் மனைவியின் சகோதரர் மர்ம ஆசாமி மூலம் வேவு பார்த்ததும் காரை பைக்கின் மீது ஏற்றி கொலை செய்ய முயன்றதாக பல்லடம் போலீசில் தனியார் நிறுவன மேலாளர் ஒருவர் புகார் அளித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில்,

பைக்கின் மீது கார் அதிவேகமாக மோதுவதற்கு முயன்ற சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி பொதுமக்களிடையே மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.