தந்தையின் உடலை அடக்கம் செய்ய முடியாத நிலை : கதறி அழுத மகன் : அதன் பின் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்!!

994

கதறி அழுத மகன்

தமிழகத்தில் தந்தையின் உடலுக்கு அடக்கம் செய்ய முடியாமல் தவித்த மகனுக்கு, இன்ஸ்பெக்டர் ஒருவர் உதவியுள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை, கோயம்பேடு மார்க்கெட்டில் கடந்த 26-ஆம் திகதி உடல் நிலை சரியில்லாமல் 50 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் மயங்கி விழுந்தார்.

இதை அறிந்த கோயம்பேடு பொலிசார், உடனடியாக அவரை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார்.

இதையடுத்து பொலிசார் நடத்திய விசாரணையில், இறந்தவர் பெயர் சங்கர் என்பதும், கோயம்பேடு மார்க்கெட்டில் தங்கி, கூலி வேலை செய்தவர் என்பதும், இவரது மகன் கொடுங்கையூரில் வசிப்பதும் தெரியவந்துள்ளது.

அதன் பின், பொலிசார் கொடுங்கையூரில் உள்ள முதியவரின் மகன் நந்தக்குமாரை தொடர்புகொண்டு, உங்களுடைய தந்தை சங்கர், இறந்து விட்டார். கீழ்ப்பாக்கம் அரக மருத்துவமனையில் அவரது உடல் உள்ளதாக கூறியுள்ளார்.

அதற்கு நந்தகுமார். நான் தனியார் நிறுவனத்தில் செக்யூரிட்டியாக வேலை செய்கிறேன். கடந்த ஒரு மாதமாக நான் வேலைக்கு செல்லவில்லை. வீட்டு வாடகைகூட தர முடியாமல் உணவுக்கு கூட தினம் தினம் தவித்து வருகிறேன். என்னுடைய தந்தையை அடக்கம் செய்ய என்னிடம் பணம் இல்லை என்று கூறி கதறி அழுதுள்ளார்.

நந்தகுமாரின் பரிதாப நிலையை பார்ர்த்து மனம் வருந்திய இன்ஸ்பெக்டர் மாதேஸ்வரன், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் இறந்த சங்கர் உடலை வாங்கி தன் சொந்த செலவில் நல்லடக்கம் செய்ய ஏற்பாடு செய்தார். இதையடுத்து முதியவர் சடலம் நல்லடக்கம் செய்யப்பட்டது.