தந்தையை கொடூரமாக கொன்ற மகன் : இதயத்தை உலுக்கும் சம்பவம்!!

542

கிருஷ்ணகிரி…

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த சூளகிரி,அண்ணா நகரை சேர்ந்தவர் முத்தப்பா. இவரது மகன் முரளி. இவருக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ள நிலையில், முரளி மாத தவணையில் பெற்ற இருசக்கர வாகனத்திற்கு சரியாக பணம் கட்டாததால் நிதி நிறுவனத்தினர் இருசக்கர வாகனத்தை பிடிங்கி சென்றுள்ளனர்.

வேலை இல்லாமல் சுற்றிவரும் நிலையில், மாத தவணை கட்ட முடியாமல் வாகனமும் எடுத்துச் செல்லப்பட்டதால் வீட்டில் தந்தை திட்டுவார் என பயந்து நண்பனிடம் கடன் பெற்று வண்டியை மீட்டு, க.டன் பெற்ற நண்பரிடமே வண்டியை கொடுத்துள்ளார்.

வண்டி இல்லாதது தெரிந்தால் வீட்டில் மரியாதை இருக்காது என நினைத்த முரளி வீட்டிலேயே திருடுவது என முடிவெடுத்துள்ளார். முரளியின் தந்தை முத்தப்பா வாட்டர் மேனாக பணி செய்து வருவதால், நள்ளிரவு நேரங்களில் வெளியே செல்வது வழக்கம். முத்தப்பா வீட்டின் மேல் மடியில் உள்ள அறையில் தங்குவது வழக்கம். அந்த அறையில் அவர் பணத்தை சேமித்து வைத்திருப்பதாக சொல்லப்படுகிறது.

ஞாயிறன்று இரவு 2 மணியளவில் முத்தப்பா அறையில் பணம் திருட சென்றபோது, விழித்துக்கொண்ட அவர் திருடுவது மகன் தான் என தெரிந்துக்கொண்டதால் ஊதாரியாகச் சுற்றும் மகனை கடுமையாக திட்டி, விடிந்ததும் பார்த்துக் கொள்கிறேன் எனக்கூறி கண்டித்துள்ளார்.

செய்வதறியாத முரளி, வீட்டிலிருந்த இரும்பு கம்பியால் முத்தப்பாவின் தலையில் தாக்கி உள்ளார். அவர் இரத்த வெள்ளத்தில் சுருண்டு விழ, அறையின் கதவை வெளிப்புறமாக பூட்டிக்கொண்டு வெளியே வந்துள்ளார்.

அறையின் கதவு பூட்டப்பட்டிருந்ததால் இரண்டு நாட்களாக முத்தப்பா மனைவி உள்ளிட்டோர் மாடி அறைக்கு செல்லவில்லை.

தொடர்ந்து அந்த அறையில் தொலைக்காட்சி ஒலித்து வந்ததால் 2 நாட்களுக்கு பிறகு முத்தப்பா அறையின் கதவை குடும்பத்தார் திறந்து பார்த்தப்போது அவர் இறந்து கிடந்து, துர்நாற்றம் வீசுவதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

சம்பவம் குறித்து உடனே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உடல் பிரேத பரிசோதனைக்காக ஒசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு, விசாரணை மேற்கொண்டதில்,

முத்தப்பாவின் மகன் முரளி கொ.லை.யாளி என தெரியவந்துள்ளது. முரளியை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.

பெற்ற மகனே தந்தையை அடித்துக் கொன்று மறைத்தது அப்பகுதியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.