தந்தையை பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்ற மகள் : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

511

ராமநாதபுரம்….

ராமநாதபுரம் அருகே ஆர்.காவனூர் பகுதியைச் சேர்ந்த ரவி-பாக்கியம் தம்பதியர். இவர்களுக்கு பவித்ரா என்ற மகள் உள்ளார். இந்நிலையில் பவித்ராவை ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு உச்சிபுளியில் திருமணம் செய்து கொடுத்துள்ளனர்.

ஆனால் இருவரும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு அதன் காரணமாக சேர்ந்து வாழாமல் அவருடன் பிரிந்து ஆர்-காவனூரில் உள்ள தனது தாய் வீட்டில் வசித்து வந்ததாக கூறப்படுகிறது. இதன்பின்னர் ரவியின் மகள் பவித்ரா-விற்கும் ராமநாதபுரம் அருகே உள்ள இடையர் வலசை பகுதியை சேர்ந்த முருகானந்தம் என்பவருக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டு பல நாட்களாக தொடர்பில் இருந்து வந்ததாக தெரிகிறது.

அடிக்கடி முருகானந்தம் ஆர்.காவனூரில் உள்ள பவித்ராவின் வீட்டுக்கு வந்து செல்வார் எனவும் கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து பவித்ராவின் தந்தை ரவி பலமுறை தட்டி கேட்டுள்ளார். இதனால் பவித்ராவுடன் தாய் பாக்கியமும் உடன் சேர்ந்து கொண்டு தந்தை ரவியுடன் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

கடந்த 8ஆம் தேதி இரவு பவித்ரா அவருடைய கள்ளக்காதலன் முருகானந்தம் மற்றும் தாய் பாக்கியம் ஆகியோர் மூன்று பேரும் சேர்ந்து இரவு 11 மணி அளவில் தூங்கி கொண்டிருந்த ரவியின் மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்துவிட்டு தப்பி ஓடியுள்ளனர். எறிந்த நிலையில் வெளியே ஓடி வந்த ரவி கூச்சலிட்டு இருக்கிறார்.அதனைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் அவசர ஊர்திக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

பின்னர் ஆம்புலன்ஸ் மூலம் அவரை மீட்டு ராமநாதபுரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

இந்த நிலையில் அவர் மறுநாள் அதிகாலை சிகிச்சை பலனின்றி இறந்துள்ளார். இதன் முதற்கட்ட விசாரணையில் தற்கொலை செய்து கொண்டதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

பின்னர் இறப்பில் மர்மம் இருப்பதாக கூறி ரவியின் சகோதரர் முருகன் அளித்த புகாரின்பேரில், ராமநாதபுரம் பஜார் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் முத்துராமு உரிய விசாரணை செய்ததில் கிடைத்த தகவலின் படி தாய் பாக்கியம் மற்றும் பவித்ரா மகளிடம் கிடுக்கிப்பிடி விசாரணை மூலம் உண்மையை ஒப்புக் கொண்டதாகத் தெரிகிறது.