தனக்கு ஆபத்து வருவது தெரியாமல் மற்றவர்களுக்கு மந்திரம் செய்த சூனியக்காரி : சுவாரஸ்ய சம்பவம்!!

799

சுவாரஸ்ய சம்பவம்

கனடாவில் சூனியக்காரி ஒருவர், தனக்கே ஆபத்து வருவது தெரியாமல், ஒருவருக்கு வர இருக்கும் பெரிய ஆபத்திலிருந்து மந்திரம் செய்து அவரை காப்பாற்றுவதாகக் கூறி, ஏமாற்றி பணம் பறிக்க முயன்றதற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.

இதில் வேடிக்கை என்னவென்றால், கனடாவில் சூனியம் வைப்பது சட்டப்படி குற்றம் இல்லை என்று அறிவிக்கப்பட இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில் Tiffany Butch (33) என்னும் அந்த பெண், சூனிய சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளதுதான்.

Timmins என்னும் சிறிய நகரின் பொலிசார், அதே நகரத்தைச் சேர்ந்த Tiffany என்ற பெண், தான் ஆவிகளுடன் பேசுபவள் என்றும், அதன் மூலம் பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பவள் என்றும் கூறி, அதே நகரத்தில் வாழும் ஒருவருடைய குடும்பத்திற்கு பெரிய ஆபத்து ஒன்று வர இருப்பதாகவும், தனக்கு பணம் கொடுத்தால் அந்த பிரச்சினையிலிருந்து விடுபட உதவுவதாகவும் கூறி ஏமாற்றியதற்காக கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

குற்றம் சாட்டப்பட்டுள்ள Tiffany, ’வடக்கின் வெள்ளை சூனியக்காரி’ என்ற பெயரால் அழைக்கப்படுகிறார்.

ஆனால் அந்த பெயர் கேட்பதற்கு நன்றாக இருப்பதால் அந்த பெயரை வைத்துக் கொண்டதாகவும், தான் ஒரு சூனியக்காரி அல்ல, தான் ஆவிகளுடன் பேசுவதன்மூலம் பிரச்சினைகளை தீர்த்து வைப்பவர் என்றும் கூறியுள்ளார். Tiffany அடுத்த மாதம் நீதிமன்றத்தில் ஆஜராகும்படி உத்தரவிடப்பட்டுள்ளார்.

ஆனால் தன் மீது கூறப்படும் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள Tiffany, மற்ற ஆவிகளுடன் பேசுபவர்கள் திட்டமிட்டு தன்னை சிக்க வைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.