இந்தியாவின் தொழிலதிபரும் ஆசியாவின் நம்பர் ஒன் பணக்காரருமான முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானியின் நிச்சயதார்த்தம் ஜீன் 30 ஆம் திகதி அவர்களது ஆண்டலியா இல்லத்தில் சிறப்பாக நடைபெற்றது.
5 அடுக்குமாடி கொண்ட சொகுசு மாளிகையான ஆண்டலியா, நிச்சயதார்ததத்திற்காக சிறப்பாக அலங்கரிக்கப்பட்டிருந்தது.முழுவதுமாக மலர் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. இதற்காக கலிபோர்னியாவில் இருந்து மலர் அலங்கார வடிவமைப்பாளர் Karen Tran வரவழைக்கப்பட்டிருந்தார்.
நிச்சயதார்த்த விழாவில் உறவினர்கள், நண்பர்கள் மற்றும் பாலிவுட் நட்சத்திரங்கள் கலந்துகொண்டு சிறப்பித்துள்ளனர்.இந்த நிகழ்ச்சியின் போது மகன் ஆகாஷ் அம்பானி தனது தாய் நீதா அம்பானியிடம் சற்று அநாகரீகமாக நடந்துகொண்ட வீடியோ வைரலாகியுள்ளது.
குடும்பத்தினர் அனைவரும் ஒன்றாக சேர்ந்து வந்து புகைப்படத்திற்கு போஸ் கொடுத்தனர். அப்போது, புகைப்படக்காரர்கள் திருமண ஜோடியினரை மட்டும் தனியாக நிற்குமாறு கேட்டனர். அதன்போது நீதா தனது மருமகள் ஸ்லோகாவின் கையை பிடித்திருந்தார்.
அப்போது, ஆகாஷ் தனது தாயின் கையை தட்டிவிட்டு தனது மனைவியை அழைத்துக்கொண்டு வந்து புகைப்படத்திற்கு போஸ் கொடுத்துள்ளார்.ஆகாஷ் அம்பானியின் இந்த வீடியோ வைரலாகி வருகிறது.