தனிக்குடித்தனம் போக மறுத்த மனைவிக்கு கணவனால் அரங்கேறிய விபரீதம்!!

270

மதுரை..

மதுரையில் உள்ள புது எல்லீஸ் நகர் பகுதியைச் சேர்ந்தவர் நாகவேல். பெயிண்டராக பணியாற்றி வரும் இவருக்கும் அலங்காநல்லூரைச் சேர்ந்த சுதாவுக்கும் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்ததுள்ளது.

இந்நிலையில் திருமணம் முடிந்த கையுடன் சுதா கணவரை தனிக்குடித்தனம் வருமாறு தினம் தினம் சொல்லி வற்புறுத்தி வந்துள்ளார். ஆனால், நாகவேல் என்னால் குடும்பத்துடன் சேர்ந்து தான் வாழ முடியும், தனிக்குடித்தனம் வர முடியாது என்று திட்டவட்டமாக கூறிவிட்டார்.

இதன் காரணமாக, தம்பதி இருவருக்கும் அவ்வப்போது சண்டை சச்சரவு ஏற்பட்டு வந்துள்ளது. இதனைத்தொடர்ந்து, வழக்கம்போல கடந்த 30-ம் தேதி வேலையை முடித்து வீட்டுக்கு வந்த நாகவேலிடம், சுதா தனிக்குடித்தனம் பேச்சை மீண்டும் எடுத்துள்ளார். இதனால் கணவன், மனைவிக்குள் வாக்குவாதம் எழுந்துள்ளது.

தொடர்ந்து இருவருக்கும் வாக்குவாதம் முற்றவே ஆத்திரமடைந்த நாகவேல், சுதாவின் கழுத்தை நெறித்து கொன்றுவிட்டார்.

இதையடுத்து, நாகவேல் அருகில் உள்ள எஸ்.எஸ். காலனி காவல்நிலையத்துக்கு சென்று தானாகவே சரணடைந்துவிட்டார். உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், ராஜவேலிடம் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும், நாகவேல் மனைவியை கொலைசெய்ததற்கு தனிக்குடித்தனம் பிரச்சனை தான் காரணமா? அல்லது வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளனவா என்கிற கோணத்தில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.