ஒடிஷா..
ஒடிஷா மாநிலத்தை சேர்ந்தவர் ஆசிஃப். இவருக்கு தற்போது 43 வயதாகிறது. இவருக்கும் பிரியங்கா பாட்லா என்ற பெண்ணுக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. ஆசிஃப் மற்றும் பிரியங்கா ஆகியோர் காதலித்து திருமணம் செய்து கொண்டதாக தகவல் தெரிவிக்கும் நிலையில், இருவரது வீட்டிலும் இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.
இதனிடையே, கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பாக, சென்னை மண்ணடி பகுதியில் ஆசிஃப் மற்றும் பிரியங்கா ஆகியோர் குடியேறி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. இதனைத் தொடர்ந்து, மைலாப்பூர் பகுதியில் உள்ள வங்கி ஒன்றில் ஆசிஃப்பும், மறுபக்கம் போரூரில் உள்ள ஐடி நிறுவனம் ஒன்றில் பிரியங்காவும் பணிபுரிந்து வந்துள்ளனர்.
திருமணமாகி ஐந்து ஆண்டுகளுக்கு மேலான நிலையிலும் ஆசிஃப் – பிரியங்கா தம்பதிக்கு குழந்தைகள் இல்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றது. அப்படி ஒரு சூழலில், இதன் பெயரில் கணவன் மனைவி ஆகியோர் அடிக்கடி சண்டை போட்டும் வந்துள்ளதாக தெரிகிறது. அதே வேளையில் மனைவி பிரியங்காவுக்கு வேறொரு நபருடன் தொடர்பு உருவானதாகவும் அவர் மீது சந்தேகம் கொண்டுள்ளார் ஆசிஃப். இதன் பெயரிலும் மனைவியுடன் ஆசிஃப் சண்டை போட்டு வந்துள்ளார்.
அப்படி ஒரு சூழலில் சமீபத்தில் ஆசிஃப் மற்றும் பிரியங்கா ஆகியோர் வீட்டில் இருந்துள்ளனர். அப்படி ஒரு சூழலில் அப்பகுதி மக்கள் மத்தியில், பிரியங்காவின் அலறல் சத்தம் கேட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. இதனைத் தொடர்ந்து சுற்றி இருந்தவர்கள் அனைவரும் ஆசிஃப் வீட்டிற்கு சென்றுள்ளனர். அங்கே உடலில் ரத்தத்துடன் கதவை திறந்து கொண்டு நின்றுள்ளார் ஆசிஃப். இதனைக் கண்டதும் அனைவரும் பதறிப் போகவே இது பற்றி போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
தொடர்ந்து சம்பவ இடம் வந்த போலீசார், ஆசிஃப்பிடம் விசாரணை மேற்கொண்டனர். மேலும், பிரியங்காவின் உடலும் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக நடந்த விசாரணையில், வழக்கம் போல ஆசிஃப் மற்றும் பிரியங்கா ஆகியோர் சண்டை போட்டுக் கொண்டிருந்ததாகவும்,
ஆசிப் அடித்ததால் வீட்டை விட்டு பிரியங்கா கிளம்ப முயன்றதாகவும் அப்போது வீட்டின் கதவை அடைத்து கோபத்தில் மனைவியின் கழுத்தை அறுத்து கொலை செய்ததாகவும் தெரிவித்துள்ளார். சென்னையில் பட்டப்பகலில் தனியாக இருந்த கணவன் மனைவி இடையே உருவான தகராறின் காரணமாக பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம், கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.