“The Icon of Millions” என்ற பெயரில் நடிகர் விஜய் பற்றி அவரின் ரசிகர் நிவாஸ் என்பவர் புத்தகம் எழுதி வெளியிட்டுள்ளார். அது விஜய் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் கிடைத்துள்ளது.
இந்நிலையில் தளபதி விஜய் நேற்று நிவாஸுக்கு போன் செய்து பாராட்டியுள்ளார். புத்தகத்தை படிக்கும்போது தனக்கு நெகிழ்ச்சியாக இருந்ததாக விஜய் நிவாஸிடம் கூறியுள்ளார். இது பற்றி ட்விட்டரில் பதிவிட்டுள்ள நிவாஸ், இதற்கு காரணமாக அமைத்த விஜய் ரசிகரக்ளுக்கு நன்றி என தெரிவித்துள்ளார்.
The Icon of Millions புத்தகம் அமேசானில் விற்பனைக்கு வந்த சில நிமிடங்களிலேயே விற்று தீர்ந்துவிடுவது குறிப்பிடத்தக்கது.