தமிழர் முறைப்படி திருமணம் செய்து கொண்ட சீன காதல் ஜோடி!!

511

சீனாவை சேர்ந்த காதலர்கள் தமிழர்கள் முறைப்படி மேளதாளம் முழங்க திருமணம் செய்து கொண்டனர்.

சீனாவை சேர்ந்த முகமாற்று அறுவை சிகிச்சை நிபுணர் யான்சாங்காய், இவரது காதலி அழகுகலை பயிற்சியாளரான ரூபிங்.

இந்து கலாச்சாரத்தில் ஆர்வம் கொண்ட இருவரும் சீர்காழியை அடுத்த காரைமேடு சித்தர்புரத்திற்கு வந்தனர்.

அங்கு வேதமந்திரங்கள் முழங்க தமிழ் கலாச்சார முறைப்படி மாலை மாற்றி, திருமணம் செய்து கொண்டனர், கூடியிருந்த கிராம மக்கள் தங்களது வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டனர்.