ஜெர்மனி…
ஜெர்மனி இளைஞர் ஒருவரை தமிழ் பெண்ணை தேடிப்பிடித்து காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். இந்த அழகிய காதல் கதை சுவாரஸ்யத்தை ஏற்படுத்தி உள்ளது. கன்னியாகுமரி மாவட்டம், ராஜாவூர் பகுதியைச் சேர்ந்தவர் லாசர். இவரது மனைவியின் பெயர் மரிய செல்வி.
இந்த தம்பதியருக்கு இரண்டு மகன்களும், அனு விண்ணிமேரி என்ற மகளும் உள்ளனர். லாசரின் மகள் அனு விண்ணிமேரி, தன்னுடைய மேற்படிப்புக்காக ஜெர்மனி நாட்டிற்கு சென்றுள்ளார். அங்கே பவேரியா மாகாணத்தில் அமைந்துள்ள பல்கலைக்கழகம் ஒன்றிலும் அவர் படித்ததாக கூறப்படுகிறது.
தொடர்ந்து, தனது மேற்படிப்பை முடித்த அணு விண்ணிமேரி, ஜெர்மனி நாட்டில் அமைந்துள்ள ஆராய்ச்சி நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது. அப்படி ஒரு சூழ்நிலையில், அதே நிறுவனத்தில், ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த பேட்ரிக் சிக்ப்ரிட் கோடல் என்பவரும் பணியாற்றி வந்துள்ளார்.
அப்போது பேட்ரிக்குடன் அனுவும் நட்பாக பழகி வந்துள்ளார். இதன் பின்னர், நாட்கள் செல்ல செல்ல இருவருக்கும் இடையே காதலும் மலர்ந்துள்ளது. தொடர்ந்து, ஜெர்மனி நாட்டிலுள்ள தனது காதலன் குறித்து, கன்னியாகுமரியில் உள்ள தனது குடும்பத்தினரிடம் அனு விண்ணிமேரி தெரிவித்துள்ளார்.
மகளின் காதலுக்கு பெற்றோரும் சம்மதம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனையடுத்து, அனு – பேட்ரிக் திருமணத்திற்கான ஏற்பாடுகளையும் செய்து வந்துள்ளனர்.
அதன்படி, ஜெர்மனி மணமகன் பேட்ரிக், தனது பெற்றோர் மற்றும் நண்பர்களுடன் குமரி மாவட்டத்திற்கும் வந்துள்ளார். பின்னர், இருவரின் குடும்பங்கள் முன்னிலையில், விண்ணிமேரி – பேட்ரிக் திருமணமும் நடைபெற்றது.
தமிழ்நாட்டை சேர்ந்த பெண் மீது காதல் உருவானது பற்றி பேசிய பேட்ரிக், “அனுவுடன் பழகியதன் காரணமாக, எனக்கு இந்திய கலாச்சாரத்தின் மீதும், இந்திய குடும்ப வாழ்க்கை முறை மீதும் அதிக நாட்டம் உருவானது.
இதன் காரணமாக ஈர்க்கப்பட்ட நான், விண்ணிமேரியை காதலிக்க தொடங்கினேன். என் காதலையும், திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற விருப்பத்தையும் அவரிடம் வெளிப்படுத்தினேன். அவரும் எனது காதலை ஏற்றுக் கொண்டதால், பெற்றோர்கள் முன்னிலையில் நாங்கள் திருமணம் செய்து கொண்டோம்.
பரோட்டா, பிரியாணி என அனைத்தும் அருமையாக இருந்தது” என ஜெர்மனி மாப்பிள்ளை பேட்ரிக் தெரிவித்துள்ளார். அனு விண்ணிமேரி – பேட்ரிக் திருமணம் தொடர்பான புகைப்படம், தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.