தம்பிகளுடன் சேர்ந்து பட்டதாரி பெண் செய்த மோசமான செயல் : போலீஸாரை மிரளவைத்த வாக்குமூலம்!!

248

சென்னை…

சென்னை கோடம்பாக்கம் டிரஸ்ட்புரத்தில் கடந்த வியாழக்கிழமை அன்று இரவு ரோந்து பணியில் போலீசார் இருந்துள்ளனர். அப்போது, இரு சக்கர வாகனத்தில் சுற்றி திரிந்த இரண்டு பேரை மடக்கி விசாரித்துள்ளனர்.

இருவரும் முன்னுக்குப்பின் முரணாக பதிலளிக்கவே போலீசார் அவர்களது பேகை வாங்கி சோதனை செய்தனர். அதில், அதிகமான போதை கொடுக்கும் மாத்திரைகள் இருந்துள்ளன.

உடனே, அவர்களை காவல் நிலையம் கொண்டு சென்று விசாரித்ததில், அவர்கள் அசோக் நகர் புதூர் முதல் தெருவைச் சேர்ந்த கிஷோர் (23) என்பதும் கே.கே.நகர் ராணி அண்ணாநகரைச் சேர்ந்த கிஷோர்குமார் (20) என்பதும் தெரிய வந்தது. தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் மேலும் பல திடுக்கிடும் தகவல் வெளியாகின.

இவர்கள், ஆன்லைனில் பல்வேறு மாநிலங்களில் இருந்து கூரியர் மூலம் மொத்தமாக போதை மாதிரிகளை கொள்முதல் செய்து அதை தமிழகத்தில் உள்ள பல இடங்களில் விற்று வந்துள்ளனர்.

ஆண்கள் பெண்கள் என பலரிடமும் வாட்சப் மூலம் தொடர்பை ஏற்படுத்தி மூளை சலவை செய்து போதை மாத்திரைகளை அவர்கள் சொல்லும் இடத்திற்கு சென்று விற்பனை செய்து வந்துள்ளனர்.

மேலும், இவர்களுடன் சென்னையைச் சேர்ந்த பூங்குன்றன் (26), தேனி கோகுலன் (24), விருதுநகர் முத்துப்பாண்டி (23) மற்றும் பட்டதாரி பெண்ணான பூந்தமல்லியைச் சேர்ந்த மித்ரா என்ற ராஜலட்சுமி (22) என்பவரும் குழுவாக செயல்பட்டு வந்தது தெரிய வந்தது.

மேலும், இந்த போதை கேங்கிற்கு மித்ராதான் மூளையாக செயல்பட்டதாக போலீசார் தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது. போதை தடுப்பு பிரிவில் ஆறு பேரையும் கைது செய்த போலீசார் நீதிமன்ற நடவடிக்கை எடுத்தனர். அத்துடன், அவர்களிடம் இருந்து 7,125 மாத்திரைகள், 9 செல்போன்கள், 2 லேப்டாப்கள், 1 ஐபேட், 3 பைக்குகள், ரொக்கம் ரூ.4,41,300 ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.