பிரித்தானியா குட்டி இளவரசர் சார்ஜ் சில தினங்களுக்கு முன் பிறந்த தம்பிக்கு தன்னுடைய அன்பான பாசத்தால் முத்தம் கொடுக்கும் புகைப்படம் முதன் முறையாக வெளியாகியுள்ளது.
பிரித்தானியாவின் தலைநகர் லண்டனில் உள்ள St Mary’s மருத்துவமனையில் இளவரசி கேட் மிடில்டனுக்கு கடந்த 23-ஆம் திகதி காலை குட்டி இளவரசர் பிறந்தார்.
பிறந்த அவருக்கு என்ன பெயர் வைக்கப்படும் என்று பலரும் எதிர்பார்த்த நிலையில், அவருக்கு Louis Arthur Charles என்று பெயர் வைக்கப்பட்டது.இந்நிலையில் மருத்துவமனையில் இருந்து சுமார் 13 நாட்களுக்கு பின் வீட்டிற்கு வந்த தம்பி Louis-ஐ குட்டி இளவரசர் George மற்றும் குட்டி இளவரசி Charlotte தங்கள் அன்பால் நினையவைத்தனர்.
அதில் இளவரசர் சார்ஜ் தம்பியை பத்திரமாக பிடித்து கொண்டு, அதன் பின் அவரது தலையில் முத்தம் கொடுக்கிறார். அப்போது Louis சிரித்தது தொடர்பாக புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது.
அதே போன்று குட்டி இளவரசி Charlotte தூங்கிக் கொண்டிருக்கும் Louis-ன் தலையில் அன்பு முத்தம் கொடுக்கிறார். வெள்ளை நிற உடை அணிந்திருக்கும் Louis பார்ப்பதற்கு மிகவும் அழகாக உள்ளார்.
வீட்டிற்கு சென்ற பின்பு முதன் முறையாக இப்புகைப்படம் வெளியாகியுள்ளதாகவும், இந்த புகைப்படத்தை இளவரசி கேட் மிடில்டன் தான் எடுத்ததாகவும் அங்கிருக்கும் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.