தரையை துடைக்கும் வேலையில் இருந்து மத்திய அமைச்சர்: யார் இவர்?

706

பாஜக கட்சியின் பிரதமர் மோடியின் அமைச்சரவையில் தகவல் மற்றம் ஜவுளி அமைச்சராக இருக்கிறார்.

சினிமா நட்சத்திரமாக இருந்த இவர், 2003 ஆம் ஆண்டு பாஜகவில் இணைந்து, இன்று ஒரு அமைச்சராக பதவி வகிக்கிறார். இதற்கு பின்னால் இவர் கடந்து வந்த பாதை மிகவும் கடினமானது.

நடுத்தரக்குடும்பத்தில் பிறந்த இவர், பள்ளிப்பருவத்திலிருந்தே நடிப்பின் மீது ஆர்வம் கொண்டவர்.

பத்தாம் வகுப்பு படிக்கும்போது, அழகுசாதனப்பொருட்கள் கடைசியில் 200 ரூபாய் சம்பளத்துக்கு பணியாற்றியுள்ளார்.

சிறு வயதிலேயே தனது குடும்பத்துக்கு பொருளாதார ரீதியாக உதவி செய்து தனது குடும்பத்தை முன்னேற்ற வேண்டும் என்ற நோக்கம் கொண்டிருந்தார்.

பள்ளிப்படிப்பை முடித்தவுடன் இவருக்கு கிடைத்த முதல் வேலை பந்த்ராவில் உள்ள எம்சி டொனால்டில் டேபிள் மற்றும் தரையை துடைப்பது. இருப்பினும் அந்த வேலையை மனம் கலங்காமல் செய்தார்.

1998 ஆம் ஆண்டு நடைப்பெற்ற மிஸ் இந்தியா போட்டியில் இறுதிச்சுற்று வரை முன்னேறினார். அதன்பின்னர், தொலைக்காட்சி தொடரில் நடிக்க ஆரம்பித்த இவர், நான்கு முறை இந்தியன் டெலிவிஷன் அகாதெமி விருதுகள் பெற்றிருக்கிறார்.

தொலைக்காட்சி தொடர்களில் நடித்தாலும், வறுமை இவரை விட்டுவிடவில்லை. பல நிராகரிப்புகளை சந்தித்த இவருக்கு , சாஸ் பி கபி பஹூ தி என்ற தொடர் வரவேற்பை கொடுத்தது.

2001 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட பின்னர், இவருக்கு இரண்டு குழந்தைகள் பிறந்தது. 2003 ஆம் ஆண்டு பாரதிய ஜனதா கட்சியில் இணைந்து கொள்கிறார். 2004 ஆம் ஆண்டு மஹாராஸ்டிரா இளைஞர் அணிக்கு துணைத்தலைவராக நியமிக்கப்பட்டார்.

2010 ஆம் ஆண்டு பாஜகவின் தேசிய செயலாளர். 2011 ஆம் ஆண்டு ராஜ்யசபா எம்பியாக வெற்றி பெற்றார். அதே ஆண்டு மனித வள மேம்பாட்டு அமைச்சராக நியமிக்கப்பட்டார்.

2016 ஆம் ஆண்டு டெக்ஸ்டைல்ஸ் அமைச்சகம் கிடைத்தது. கூடுதலாக தற்போது செய்தி மற்றும் தகவல்தொழில்நுட்ப அமைச்சகத்தையும் கண்காணித்து வருகிறார்.