தற்கொலை செய்தது ஏன் : இளம்பெண்ணின் இறுதி வார்த்தைகள்!!

994

இந்தியாவின் நொய்டாவில் உள்ள பிரபல மாலிலிருந்து இளம்பெண் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பில் பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

உத்திரபிரதேசத்தை சேர்ந்தவர் ஷிவானி(வயது 25), தற்போது நொய்டாவில் தங்கி வேலைபார்த்து வருகிறார். இந்நிலையில் நொய்டாவின் பிரபல மாலில் நேற்று மூன்றாவது மாடியிலிலிருந்து குதித்து இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார்.

உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்றும், பலனில்லாமல் போனது.

இந்நிலையில் அவரது உடலில் எழுதியிருந்த தற்கொலை குறிப்பில், தன்னுடைய மரணத்திற்கு யாரும் காரணமில்லை என்றும், காதலன் தன்னை கண்டுகொள்ளாததால் மனமுடைந்து காணப்பட்டதே இதற்கு காரணம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைதொடர்ந்து மாலுக்கு ஷிவானி மட்டும் தனியாக வந்தாரா? அல்லது வேறு ஏதும் பிரச்சனையா என்பது குறித்து சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ய பொலிசார் முடிவெடுத்துள்ளனர்.