தற்கொலை செய்வதை தவிர வேறு வழியில்லை: பிரபல நடிகர் வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ!

990

பிரபல நடிகர் இந்தர் குமார் கடந்தாண்டு மாரடைப்பால் உயிரிழந்த நிலையில் அதற்கு முன்னர் அவர் போதையில் தற்கொலை குறித்து பேசிய வீடியோ தற்போது வெளியாகி வைரலாகியுள்ளது.

பாலிவுட்டில் முன்னணி நடிகராக திகழ்ந்த இந்தர் குமார் கடந்தாண்டு யூலை மாதம் மாரடைப்பால் உயிரிழந்தார்.இதற்கு முன்னர் அவர் கையில் மதுபாட்டிலை வைத்து கொண்டு தற்கொலை குறித்து பேசிய வீடியோ இணையத்தில் தற்போது வெளியாகியுள்ளது.

அதில், தன்னுடைய தீயபழக்கங்களால் தன்னுடைய தொழில் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை எவ்வாறு சீராழிந்தது என குமார் கூறுகிறார்.மேலும் அழுது கொண்டே தன் பெற்றோரிடம் மன்னிப்பு கேட்கும் குமார் தான் தற்கொலை செய்வதை தவிர வேறு வழியில்லை என கூறுவது போல வீடியோவில் உள்ளது.

இந்த வீடியோ பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் இது திரைப்படம் ஒன்றுக்காக எடுக்கப்பட்ட காட்சி என குமாரின் மனைவி பல்லவி சரப் தெரிவித்துள்ளார்.

இதை மக்கள் உண்மையென நம்புவது வேதனையளிக்கிறது எனவும், குமார் தற்கொலை செய்யவில்லை எனவும் பல்லவி கூறியுள்ளார்.

https://youtu.be/Nb7YYStjHd4