தலைவி ஜுலியுடன் அரசியலில் பணியாற்ற எனக்கு தகுதி வரவில்லை- பிரபல நாயகியின் பதில்!!

651

பிக்பாஸ் என்ற நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் ஜுலி. பிரபலமானார் என்பதை தாண்டி மோசமான விமர்சனங்கள் மூலம் மக்களிடம் அதிகம் போய் சேர்ந்தார் என்றே கூறலாம்.

சமீபகாலமாக நான் அரசியலுக்கு வரப் போகிறேன் என்று தொடர்ந்து வீடியோ வெளியிட்டார் ஜுலி.இந்த நேரத்தில் டுவிட்டரில் ஜுலி மக்கள் இயக்கம் என்ற பெயரில் இருக்கும் பக்கத்தில் நடிகை கஸ்தூரியை டேக் செய்து, நீங்களும் ஜுலியுடன் அரசியலில் இறங்கினால் உங்களை நாங்கள் முதலமைச்சர் ஆக்குவோம் என்று பதிவு செய்துள்ளனர்.

அதற்கு கஸ்தூரி, தலைவி ஜூலியுடன் இணைந்து பணியாற்றும் அளவுக்கு எனக்கு தகுதியோ அனுபவமோ இன்னும் வரவில்லை என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன் என பதிவு செய்துள்ளார்.