கர்ப்பிணி பெண்….
இந்தியாவில் 3 மாத கர்ப்பிணியான வன சரக பெண் அதிகாரி தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது.
மராட்டியத்தின் சட்டாரா பகுதியை சேர்ந்த வன சரக பெண் அதிகாரி சிந்து சனாப். காட்காவன் வன பகுதியில் பணியாற்றி வருகிறார். 3 மாத கர்ப்பிணியான இவரை பணி முடிந்து வரும்போது, கணவன் மற்றும் மனைவி என இரண்டு பேர் கடுமையாக தாக்கியுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக பஞ்சாயத்து தலைவர் ராமசந்திர ஜான்கர் மற்றும் அவரது மனைவி பிரதீபா ஜான்கர் இருவரும் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
இது தொடர்பில் கர்ப்பிணி பெண் கூறுகையில், நான்கு மாதங்களுக்கு முன் அந்த பகுதியில் எனக்கு பொறுப்பு வழங்கப்பட்டிருந்தது. நான் வேலை செய்ய ஆரம்பித்த நாள் முதல் பலர் என்னை பல விதமாக துன்புறுத்தினர்.
வனத்துறை செய்யும் வேலைக்கு காட்டில் பணிபுரியும் பெண் தொழிலாளர்களை எங்களுடைய அனுமதியின்றி எப்படி அழைத்துச் செல்கிறீர்கள், புல்களை ஏன் வெட்டுகிறீர்கள் என்று என்னிடம் கேள்வி கேட்டார்கள்.
அப்படிச் செய்ய எனக்கு உரிமை உண்டு என நான் பதிலளித்தேன். ஜனவரி 19ஆம் திகதி நான் மீண்டும் பெண் தொழிலாளர்களுடன் விலங்குகளை எண்ணச் சென்றேன். இப்போது என் கணவரும் உடன் வந்தார்.
அப்போது அந்த தலைவர்கள் கூலித்தொழிலாளிகளை ஏன் அழைத்துச் செல்கிறாய் என கேட்டவாறு என்னையும் எனது கணவரையும் செருப்பால் அடிக்க ஆரம்பித்தார்கள்.
வனப் பணிகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை தவறாகப் பயன்படுத்த அனுமதிக்காததால் அந்த தலைவர்கள் கோபமடைந்ததாக சிந்து குற்றம்சாட்டினார்.
பெண் வனக் காவலர் தாக்கப்பட்ட சம்பவம் குறித்து கருத்து தெரிவித்துள்ள அமைச்சர் ஆதித்யா தாக்கரே, குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இதுபோன்ற சம்பவங்களை பொறுத்துக் கொள்ள முடியாது என்று கூறியுள்ளார்.