தவறு செய்யாத அப்பாவி கணவன் உயிரை விட்ட சோகம் : மனைவி குடும்பத்தாரின் கொடுஞ்செயல்!!

983

இந்தியாவில் மனைவி தற்கொலை செய்து கொண்ட வழக்கில் கணவர் நிரபராதி என தீர்ப்பளிக்கப்பட்ட சில மணிநேரத்துக்கு முன்னர் கணவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

புனேவை சேர்ந்தவர் ரவுட், இவர் மனைவி ராஜஸ்ரீ, தம்பதிக்கு திருமணமாகி 12 ஆண்டுகள் ஆன நிலையில் இருவருக்குள்ளும் அடிக்கடி சிறியளவில் சண்டை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் கடந்த 2016-ஆம் ஆண்டு யூலை 11-ஆம் திகதி ராஜஸ்ரீ உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்து தற்கொலை செய்து கொண்டார்.

இதையடுத்து ராஜஸ்ரீ குடும்பத்தார் ரவுட் தினமும் அடித்து கொடுமைப்படுத்தியதால் தான் அவர் தற்கொலை செய்தார் என பொலிசில் புகார் அளித்தார்கள். இதுதொடர்பாக பொலிசார் ரவுட் மீது வழக்குப்பதிவு செய்த நிலையில் நீதிமன்ற விசாரணை நடந்து வந்தது.

இவ்வழக்கின் தீர்ப்பு நேற்று வந்த நிலையில் தீர்ப்பு வருவதற்கு சில மணிநேரத்துக்கு முன்னால் வீட்டிலிருந்து வெளியில் சென்ற ரவுட் அருகிலிருந்த மலையிலிருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

இதனிடையில் நீதிமன்ற தீர்ப்பில் ராஜஸ்ரீ தற்கொலை வழக்கில் ரவுட் மீது தவறில்லை என கூறப்பட்டு நீதிமன்றம் அவரை விடுவித்திருந்தது.

இதுகுறித்து பேசிய ரவுட்டின் குடும்பத்தார், ராஜஸ்ரீ தற்கொலைக்கு ரவுட் காரணமில்லை, ஆனால் பொலிசாரும் ராஜஸ்ரீயின் குடும்பத்தாரும் வேண்டுமென்றே ரவுட்டுக்கு தொல்லை கொடுத்து வந்தார்கள்.

இதன் காரணமாகவே அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக கூறியுள்ளனர்.