தாங்க முடியாமல் கண்ணீர் விட்டு அழுத நடிகை சதா! பலரும் ஒதுக்கிய சோகம்!!

690

நடிகை சதா ஜெயம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் தலை காட்டினார். படம் வெற்றியாக அவர் மீது அதிகமான எதிர்பார்ப்பு இருந்தது. பின் தமிழ், தெலுங்கு என சில படங்களில் நடித்து வந்தார்.

தமிழில் அந்நியன், பிரியசகி, உன்னாலே உன்னாலே என அவரின் படங்கள் சொல்லும் படியாக அமைந்தது. அதன் பின் அவரின் மார்க்கெட் தமிழ் சினிமாவில் கொஞ்சம் இறங்கிவிட்டது.

தற்போது தயாரிப்பாளராகவும், அதே படத்தில் நடிகையாகவும் அவர் மாறியுள்ளார். விஜய் நடித்த தமிழன் படத்தை இயக்கிய மஜீத் தான் டார்ச் லைட் என்னும் இப்படத்தை இயக்குகிறாராம்.

பாலியல் தொழிலாளியின் வாழ்க்கையை சொல்லும் டார்ச் லைட் படத்தின் கதை மிக வலுவானதாம். பெண்களிடம் மிகுந்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் படியாக இப்படம் அமையுமாம்.

இக்கதையை இயக்குனர் 40 நடிகைகளிடம் சொல்லியிருக்கிறாராம். எல்லோருமே கதையை கேட்டு ஒதுக்கிவிட்டார்களாம். கடைசியில் சதாவிடம் கதையை சொல்ல அவர் தாங்கமுடியாமல் கண்ணீர் விட்டு அழுதுவிட்டாராம். அதோடு படத்தை நானே தயாரிக்கிறேன் என ஒப்புக்கொண்டாராம்.