தான் வேலைபார்த்த நகைக்கடையில் கொஞ்சம், கொஞ்சமாக நகைகளை தி.ருடி சொந்தமாக நகைகடையே ஆரம்பித்த இளைஞர் : வெளியான அ.திர்ச்சி தகவல்!!

394

நகைக்கடை…

தமிழ் சினிமா ஒன்றில் கவுண்டமணியின் இளநீர் கடையில் இருந்து செந்தில் துணையுடன் கயிறுகட்டி இளநீர் குலைகளை தி.ரு.டி வடிவேலு சொந்தமாக இளநீர் கடை போட்டு கையும் களவுமாக மாட்டிக் கொள்வார். இந்த காமெடி காட்சி போல ஒரு உண்மை சம்பவம் சென்னை நம்மாழ்வார் பேட்டையில் அரங்கேறியுள்ளது..!

சென்னை கீழ்ப்பாக்கம் அடுத்துள்ள நம்மாழ்வார் பேட்டை ஒத்தவாடை தெருவில் ரஞ்சித்குமார் மற்றும் அவருடைய சகோதரர்கள் இணைந்து சுகன் ராஜ்மேத்தா கோல்டு ஹவுஸ் என்ற நகைக்கடையை நடத்தி வருகின்றனர்.

இவர்களது தந்தை காலத்தில் இருந்து சுமார் 40 வருடமாக இயங்கி வரும் இந்த நகை கடையில் ராஜஸ்தானைச் சேர்ந்த வீரேந்தர் என்பவர் கடந்த 15 ஆண்டுகளாக ஊழியராக இருந்து வந்துள்ளார். நகைக்கடை உரிமையாளர் ரஞ்சித் குமாரின் குடும்ப உறுப்பினர் போன்று வீரேந்தரும் இருந்து வந்ததால், அவர் மீது நம்பிக்கை வைத்து கடையின் தங்க நகை லாக்கர் சாவியை ஒப்படைத்து இருந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நகைக்கடையில் பொதுமக்கள் அடகு வைக்கும் நகைகள் குறைவது தெரியவந்ததால், வீரேந்தர் மீது நகைக்கடை உரிமையாளர் ரஞ்சித்திற்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனால், அவரை கையும் களவுமாக பிடிப்பதற்கு புதிதாக வாங்கி வந்த நகைகளை, அடகு பிடிக்கபட்ட நகைகள் என கூறி வீரேந்தரிடம் கொடுத்து லாக்கரில் வைக்க சொல்லியுள்ளார்.

சில நாட்கள் கழித்து அவற்றை பார்த்த போது அதில் ஒரு தங்க செயின் காணாமல் போயுள்ளது. இதையடுத்து ரஞ்சித் குமார் அவருடைய சகோதரர்களும் ஊழியர் வீரேந்தரை பிடித்து விசாரித்ததில் நகையை தி.ரு.டியதை ஒப்புக் கொண்டுள்ளார்.

கடந்த பல வருடங்களாக சிறுக சிறுக கடையில் இருந்து நகைகளை தி.ரு.டியதையும் ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது.

இதுவரை சுமார் 25 லட்சம் மதிப்பிலான தங்க நகைகள், வெள்ளிப் பொருட்களை அவர் தி.ரு.டி உள்ளதாகவும், அவற்றை கொண்டு வீரேந்தர் தனது சகோதரர் ரத்தன் பட்டேல் என்பவரை வைத்து சென்னை கொளத்தூரில் பாலாஜி கோல்ட் ஹவுஸ் என்ற பெயரில் புதிய நகை கடை ஒன்றை தொடங்கியிருப்பதை அறிந்து ரஞ்சித்குமார் மற்றும் அவருடைய குடும்பத்தினர் அ.திர்ச்சி அடைந்தனர்.

குடும்ப உறுப்பினர் போல பழகியவர் பேராசையில் இப்படி செய்து விட்டாரே என வருந்திய ரஞ்சித் குமார் குடும்பத்தினர் முதலில் அவர் மீது போலீசில் புகார் எதுவும் கொடுக்காமல் எடுத்த நகைகளையோ அல்லது அதற்கான தொகையையோ திருப்பி செலுத்தி விடுமாறு நகைக்கடை உரிமையாளர்கள் சங்கத்தினர் முன்னிலையில் எழுதி வாங்கிக்கொண்டு அனுப்பியுள்ளனர்.

இந்த சம்பவம் நடந்து ஒரு வருடமாகியும் நகைகளை திருப்பித் தராமல் இழுத்தடித்து வந்த விரேந்தர், தி.ரு.டப்பட்ட நகைகள் குறித்து ரஞ்சித்குமார் தொடர்ந்து கேட்டு வந்ததால் அடியாட்களை அழைத்து வந்து மிரட்டியதாகவும்,

மேலும் 15 லட்சம் ரூபாய் கொடுக்கவில்லை என்றால் கொலை செய்து விடுவதாக மிரட்டியதாகவும் குற்றஞ்சாட்டிய ரஞ்சித் குமார் இது குறித்து அயனாவரம் உதவி ஆணையரிடம் புகார் அளித்துள்ளார். இந்த நகை அபேஸ் சம்பவம் குறித்து தலைமைச் செயலக காலனி போலீசார் இந்த புகார் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழகத்தில் நகை அடகு கடை நடத்தும் வட மாநிலத்தை சேர்ந்த பெரும்பாலான நகை வியாபாரிகள் தங்களிடம் உள்ள நகைகளுக்கு முறையான கணக்குகளை பராமரிப்பதில்லை என்றும் அவர்கள் ஹால் மார்க் தரச்சான்று இல்லாத நகைகளை ஏராளமாக இருப்பு வைத்திருப்பதாகவும் கூறப்படுகின்றது.

இதனை பயன்படுத்தி அங்கு வேலை பார்க்கின்ற சில விவரம் அறிந்த ஆசாமிகள் இது போன்ற கைவரிசையில் ஈடுபட்டு பக்கத்து ஏரியாக்களில் நகை அடகுகடை திறப்பது நீண்ட காலமாக நடப்பதாகவும், தங்களிடம் முறையான கணக்குகள் இல்லாததால் பாதிக்கப்பட்டவர்கள் காவல்துறையை அனுகுவதில்லை என்றும் கூறப்படுகின்றது. இந்த நிலையில் ரஞ்சித்குமார் போலீசில் புகார் அளித்துள்ளது குறிப்பிடதக்கது.