தாயால் பாலியல் தொழிலில் தள்ளப்பட்ட சிறுமி கண்ணீர் பேட்டி!!

594

அமெரிக்காவில் 7 வயது சிறுமியை அவரின் பெற்றோரே பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.நியூ மெக்சிகோவில் உள்ள அல்புகுயிர்குயூ நகரை சேர்ந்தவர் ஜேம்ஸ் ஸ்டீவர்ட். இவர் மனைவி டெரி லீ ஷன்சீஸ்.

தம்பதிக்கு 7 வயதில் ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர்.இந்நிலையில் தனது மகளை வலுக்கட்டாயமாக பாலியல் தொழிலில் ஈடுபட டெரி வற்புறுத்தியுள்ளார். இதற்கு ஜேம்ஸும் உடந்தையாக இருந்துள்ளார்.

இதோடு தங்களின் மகனை மற்றவர்களிடம் பிட் பாக்கெட் அடித்து பணத்தை திருட சொல்லியும் பெற்றோர் வலியுறுத்தியுள்ளார்.பெற்றோரின் கொடுமை தாங்காத இருவரும் இது குறித்து பொலிசில் புகார் அளித்துள்ளனர். இதையடுத்து டெரி மற்றும் ஜேம்ஸை பொலிசார் கைது செய்துள்ளனர்.

சிறுமி பொலிசாரிடம் அளித்துள்ள வாக்குமூலத்தில், எனக்கு என் பெற்றோர் சரியாக உணவு கொடுக்க மாட்டர்கள்,என் அம்மா என்னை ஹீல்ஸ் ஷூ அணிய கட்டாயபடுத்துவதோடு, அதிக மேக்கப் போட்டு கொள்ள சொல்வார்.

இதோடு என்னை பார்டிகளுக்கு அழைத்து செல்வார் என கண்ணீருடன் கூறியுள்ளார்.குறித்த பார்டிகளில் சிறுமியின் தாய் டெரி நடனமாடுவார் என தெரியவந்துள்ளது.

டெரி மற்றும் ஜேம்ஸ் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.