தாயின் ஆண் நண்பரால் 13 வயது மகளுக்கு நேர்ந்த கொடுமை : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

278

சென்னை….

சென்னையை அடுத்த அம்பத்தூர் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது கணவரைப் பிரிந்து மகன் மற்றும் மகளுடன் தனியாக வசித்து வருகிறார். இதையடுத்து இவருக்கு பிஸ்வாஜி என்ற வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து இருவரும் திருமணம் செய்து கொள்ளாமல் ஒன்றாக 10 வருடங்கள் வசித்து வந்துள்ளனர்.

இந்நிலையில் பிஸ்வாஜி அந்தப் பெண்ணின் 13 வயது மகளை மிரட்டித் தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளார்.

இதனை அறிந்த அவர் தனது பிள்ளைகளைக் அழைத்துக்கொண்டு தனியாக பட்டாபிராம் பகுதிக்குச் சென்றுள்ளார். அங்கு வந்த பிஸ்வாஜி அந்த சிறுமியை இழுத்துச் சென்று வன்கொடுமை செய்துள்ளார்.

இதுகுறித்து அந்தப் பெண் மகளிர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார். இந்த புகாரின் அடிப்படையில் போலிஸார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து பிஸ்வாஜியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.