தாயின் தொப்புள் கொடியில் பிளாஸ்டிக்! உலகையே பே ரதி ர்ச்சியில் ஆ ழ் த்திய ஆய்வு!!

417

தொப்பிள் கொடி……

கருவுற்ற தாயின் தொப்பிள் கொடியில் பிளாஸ்டிக் துகள்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது ஒட்டுமொத்த உலகத்தையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இத்தாலியில் நடைபெற்ற ஆய்வொன்றிலேயே மருத்துவர்கள் மைக்ரோ பிளாஸ்டிக்(ஐந்து மி.மீக்கும் குறைவாக இருந்தால்- நுண்நெகிழி) துகள்களை கண்டறிந்துள்ளனர்.

கருவுற்ற ஆறு பெண்களின் தொப்புள் கொடியை ஸ்பெக்ட்ரோஸ்கோப்பி முறையில் ஆராய்ந்ததில், நான்கு பெண்களின் தொப்புள்கொடிக்குள் 12 மைக்ரோ பிளாஸ்டிக் துகள்கள் இருந்திருக்கின்றன.

வெறும் 4 சதவிகித பகுதிகளை ஆராய்ந்ததற்கு இவ்வளவு இருக்கின்றது என்றால், முழுமையாக ஆராய்ந்தால் இதன் எண்ணிக்கை அதிகரிக்கும் என கூறப்படுகிறது.

இந்த 12 மைக்ரோ பிளாஸ்டிக்களில் மூன்று பாலிப்ரோபிலீன் துகள்கள் மற்றவை பெயின்ட், சோப் போன்ற அன்றாடப் பொருட்கள், ஒட்டுவதற்குப் பயன்படுத்தப்படுகிற கோந்து முதலியவற்றில் பயன்படுத்தப்படும் நிறமூட்டிகள்.

இவை எப்படி உடலுக்குள் வந்திருக்கும் எனவும், இவை குழந்தையின் உடலுக்குள் ஏற்கனவே பயணித்துவிட்டனவா என்பதும் ஆராயப்பட வேண்டியது.

இதில் சிக்கல் என்னவென்றால், இவை எல்லாமே 0.01 மி.மீக்கும் குறைவான அளவுள்ள துகள்கள் என்பதால், இவற்றால் எளிதில் ரத்தத்தில் கலந்து உடலுக்குள் பயணிக்க முடியும் என்பதுதான்.

இது குழந்தையின் உடலிலும் சேர்ந்தால், அதன் நோய் எதிர்ப்பு சக்தி பாதிக்கப்படலாம் என அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.